Memes: நல்ல சாப்பாடு கொடுங்க.. 200, 300 ரூவா ஆனாலும் சரி.. ஹே அண்ணனுக்கு ஒரு தக்காளி சாதம் கொடு
சென்னை: அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் பார்சல் என்ற காமெடியை வைத்து தக்காளி விலையை அருமையாக சொல்லியுள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்!
பெட்ரோல் டீசல் , கேஸ் சிலிண்டர் விலை, எண்ணெய் விலை என ஒரு பக்கம் இதன் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. மறுபக்கம் தக்காளி விலையும் பெட்ரோல் டீசலுக்கு இணையாக எகிறி வருகிறது.
இதனால் தக்காளியின் விலையை கேட்கக் கூட இல்லத்தரசிகள் தயாராக இல்லை. கடந்த காலங்களில் தக்காளியை தங்கம் போல் பீரோவில் வைத்து பூட்டி வைத்திருந்தனர். இந்த முறை என்னென்ன காலக் கொடுமைகள் நடக்க போகிறதோ.
தக்காளி விலை சோகத்திற்கு மத்தியில் உங்களை மகிழ்விக்க சில மீம்ஸ்கள் இதோ..
Memes: ஹலோ பாய்! எப்படி இருக்கீங்க? சலாம் அலைக்கும்! கொஞ்சம் பொறுடா! இன்னும் அடுப்பே பத்த வைக்கலை!

நல்ல சாப்பாடு
அண்ணே நல்ல சாப்பாடு கொடுங்க 200, 300 ரூபாய் ஆனாலும் சரி
அண்ணனுக்கு ஒரு தக்காள் சாதம் தக்காளி ஊறுகாய் கொடு என அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் பார்சல் காமெடியை நினைவுப்படுகிறது இந்த மீம்.

தக்காளி சட்னி
இன்னைக்கு எங்க வீட்ல தக்காளி சட்னி தெரியுமா
என்னங்கடா ஆளாளுக்கு வீட்ல தக்காளி சட்னி செஞ்சி வெறுப்பேத்துறீங்களா என சார்பட்டா பரம்பரை சீனை நினைவுப்படுத்துகிறது இந்த மீம்.

நம்மளை மிஞ்சிடுவான்
போற போக்கை பார்த்தா நம்மைளையே மிஞ்சிடுவான் போல என பெட்ரோல் டீசல் விலை தக்காளி விலையை பார்த்து சொல்வது போல் உள்ளது இந்த மீம்.

தக்காளி சட்னிதான் கேட்டேன்
ஓட்டலில் தோசைக்கு தொட்டுக்க கொஞ்சமா தக்காளி சட்னி தான்டா கேட்டேன்
அவன் என்ன கோவத்துல இருந்தானோ தெரியலை பொசுக்குன்னு இவ்வளவு பெரிய கத்திய எடுத்துட்டான்.
நா அப்படியே ஷாக் ஆயிட்டேன் என்கிறது இந்த மீம்.