வாங்க ப்ரோ சாப்பிட்டுட்டு வந்து சாவகாசமா உண்ணாவிரதம் இருக்கலாம்.. ஜீயரை வைத்துச் செய்த நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆண்டாள் தாயார் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாவிரதம் தொடரும்- வீடியோ

  சென்னை: தனியார் பத்திரிக்கை நடத்திய நிகழ்வு ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசினார். அவர் ஆண்டாளின் பிறப்பு குறித்துத் தவறுதலாக பேசிவிட்டதாகச் சர்ச்சை எழுந்தது.

  வைரமுத்துவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் போராட்டம் அறிவித்து இருந்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் 17ம் தேதி தனது உண்ணாவிரத்தை தொடங்கினார்.ஆனால் அதற்கு மறுநாளே அவர் தனது உண்ணா விரதத்தைக் கைவிட்டார்.

  இந்த நிலையில் மீண்டும் நேற்று உண்ணா விரதம் தொடங்கினார். தற்போது அவர் விரதத்தை முடித்துள்ளதாக அறிவித்துள்ளார். ஜீயர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட நிலையில் பலரும் அவரைக் கலாய்த்து வருகிறார்கள்.

  அட்ராசிட்டி

  இவர் ஜீயரின் உண்ணாவிரத அட்ராசிட்டி என்று கூறி விவேக் படியில் மேலும், கீழும் இறங்கும் வீடியோவை போட்டு இருக்கிறார்.

  புதுசு தினுசு

  இவர் ''சாகும்வரை உண்ணாவிரதம் தான் கேள்விபட்டிருக்கேன். இது என்ன சோர்வுறும்வரை உண்ணாவிரதம் '' என்று குறிப்பிட்டுள்ளார்.

  குழம்பு

  இவர் ''ரொம்ப நாளைக்கு அப்புறம் ஜீயர் வீட்டில் வத்தல் குழம்பாம் அதான்.'' என்றுள்ளார்.

  நானும் இருப்பேன்

  இவர் ''ஜீயர் மீண்டும் உண்ணாவிரதம் இருக்க கோரி உண்ணாவிரதம் இருக்க போகிறேன்.'' என செம காமெடியாக குறிப்பிட்டுள்ளார்.

  சாப்பிட்டுட்டு வந்து பண்ணலாம்

  இவர் ''ஜீயர் உண்ணாவிரத போராட்டத்தில் இப்ப லன்ச் ப்ரேக்.. மீண்டும் மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கும் என தெரிவித்துக்கொள்கிறோம்..'' என்றுள்ளார்.

  கொடுமையிலும் கொடுமை

  இவர் ''ஜீயர் உண்ணாவிரதம் வாபஸ்...பசிக்கொடுமைதான் என்ன செய்ய..!'' என்று குறிப்பிட்டுள்ளார்.

  பசி பசி

  இவர் ''பசிக்கும் வரை உண்ணாவிரதம் இருப்போம்.எச்சரிக்கை'' என்று கலாய்த்து இருக்கிறார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Jeeyar stops his hunger strike. After this announcement social became fire on jeeyar issue.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற