இவ்வளவு நாளா இரண்டு பேரும் பேக்கரி மேல தான் குறியா இருந்து இருக்கீங்க!!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்களுக்காக அவரது அண்ணன் மகனும் மகளும் சண்டை போட்டுக்கொண்டனர். விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையோன நேற்று அவர்கள் போட்டுக்கொண்ட சண்டையால் போயஸ்கார்டன் கிடுகிடுத்து போனது.

தாங்கள்தான் ஜெயலலிதாவின் வாரிசு, ஜெயலலிதாவின் சொத்துக்கள் முழுக்க தங்களுக்கு தான் என அவர்கள் கூறினர். இது ஒரு புறமிருக்க தீபக் தன்னை திட்டமிட்டு வரவழைத்து கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டினார் தீபா.

மேலும் சசிகலாவுடன் சேர்ந்துகொண்டு பணத்துக்காக தீபக் ஜெயலலிதாவை கொன்றுவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அவர்களின் இந்த சண்டையை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பேக்கரி மேல..

போயஸ் கார்டன் எனக்கும் தீபாவுக்கும்தான் சொந்தம் #தீபக் அப்ப இவ்வளவு நாளா இரண்டு பேரும் பேக்கரி மேல தான் குறியா இருந்து இருக்கீங்க! என்கிறார் இந்த நெட்டிசன்

ஐபிஎல் நடத்திரலாம்...

ஓபிஎஸ் அணி, சசி அணி, சசி அணி, தினகரன் அணி, தீபா அணி, தீபா_புருஷன் அணி, தீபக் அணி இன்னும் ஒரு_அணி வந்தா போதும் ஐபிஎல் நடத்திரலாம்... என்கிறார் இந்த வலைஞர்

உங்களையாவது..

#தீபா, #தீபக் யார் என்றே எங்களுக்கு தெரியாது: #தம்பிதுரை எம்பி விளக்கம் #உங்களையாவது உங்களுக்கு யாருன்னு தெரியுமா தம்பிதுரை அண்ணே?

அவங்களுக்கு சொந்தமாம்

#தீபக் #தீபா தெரியாது -செங்கோட்டையன்
#ஜெயலலிதா ஜெயலலிதான்னு இருந்தாங்க. அம்மா அம்மான்னு கீழ விழுந்து கும்பிட்டீங்களே... அவங்களுக்கு சொந்தமாம்... என கூறுகிறார் இந்த நெட்டிசன்..

அந்த புள்ளத்தே

#தீபக் என்பவர் யார்? #தம்பிதுரை
ஏ1 செத்தப்ப நீங்க குப்புற விழுந்து கிடந்தப்ப ஏ2 உடன் சேர்ந்து காரியம் பண்ணினாரே அந்த புள்ளத்தே #தீபக் என்கிறார் இந்த வலைஞர்..

பயங்கரமா இருக்கு

#வேதாளம் டிரான்ஸ்பர்மேஷன விட #தீபா டிரான்ஸ்பர்மேஷன் பயங்கரமா இருக்கு என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..

படு லோக்கலா தான்

தூயத் தமிழ்ல பேசறவங்க சாந்த சொரூபி கோவம் வந்தா படு லோக்கலா தான் பேசுவாங்க போல.. #தீபா என்கிறார் இந்த நெட்டிசன்...

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Yesterday Deepa and Deepak fought each other in the Poes garden. On this issue Netizens making fun of them.
Please Wait while comments are loading...