ரூ.2000 நோட்டுல சிப் இருக்குன்னு நம்பி சிலுத்துபோயி சில்லறைய சிதற விட்ட நாள் இன்று- நெட்டிசன்ஸ் தெறி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பண மதிப்பிழப்பு..ராகுல் காந்தி வெளியிட்ட நெஞ்சை உருக்கும் போட்டோ!- வீடியோ

  சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் அவற்றை கலாய்த்து வருகின்றனர்.

  கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் மக்கள் பெரும் துயரமடைந்தனர்.

  அன்றாட செலவுக்கே பணம் இல்லாமல் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளாயினர். இந்நிலையில் அதன் ஓராண்டு நிறைவு நாளை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

  பெரோல் போட..

  உழைத்த பணத்தில் பெட்ரோல் போட ஒரு கிமீ தூரம் லைனில் நின்று நாசமாக போன நாள்... என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்

  சில்லறைய சிதறவிட்ட நாள்..

  2000 ரூவா நோட்ல சிப் இருக்கு அத புதைச்சி வைச்சா மோடிக்கு அலாரம் அடிக்கும்னு சொன்னதல்லாம் நம்பி சிலுத்துபோயி சில்லறைய சிதற விட்ட நாள் இன்று.. என கூறுகிறார் இந்த நெட்டிசன்

  சுப்பாயி சுருக்குப் பை

  சுப்பாயி சுருக்கு பையில் இருந்த பணத்தை சூறையாடிய தினம்... என்கிறது இந்த டிவிட்

  உச்சிமுகர்ந்த தினம்..

  முதன் முதலாக அனைத்து இந்தியர்களும் மன்மோகன் சிங்கை பாராட்டி உச்சிமுகர்ந்த தினம் இன்று !! என்கிறார் இந்த வலைஞர்

  புரட்சி மோட்..

  டிஎல் நவ் மறக்க முடியுமா அந்த நாளை புரட்சி மோட்.. என கலாய்க்கிறார் இந்த வலைஞர்

  சொன்னது போலவே..

  சார்,நீங்கள் கூறியது போலவே #சிப் வைத்த 2000 நோட் வந்துவிட்டது..! என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்..

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens making fun of Demoneyization first year anniversary. Last year in this date PM Modi announced Demonetization.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற