சயின்டிஸ்ட் அண்ணன் சொன்னா சரியாதான் இருக்கும்..! செல்லூராரை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
விஜயேந்திரருக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரருக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காமால் அதனை அவமதித்தார் காஞ்சி இளைய மாடதிபதி விஜயேந்திரர். இது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விஜயேந்திரர் எந்த தவறும் செய்யவில்லை, அவர் நல்ல பண்பாளர் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை வைத்து அமைச்சர் செல்லூர் ராஜூவை சமூக வலைதளங்களில் மரணக் கலாய் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
|
தியானம்னு சொல்றதுதான் தவறு
விஜயேந்திரர் தவறு செய்யவில்லை தியானம்தான் செய்தார்: செல்லூர் ராஜூ
தியானம் செய்தது தவறு இல்லை, ஒரு தவறை செய்துவிட்டு அதை தியானம்னு சொல்றதுதான் தவறு..
|
இன்னொரு தவறுதான்
விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை தியானம்தான் செய்தார். செல்லூர்ராஜூ
#தியானம் செஞ்சேன்னு பொய் சொல்றதும் இன்னொரு தவறுதான்
|
ஒரு முடிவுக்கு வாங்கலே..
யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
#கடம்பூர்_ராஜு
விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை. தியானம்தான் செய்தார்.
#செல்லூர்_ராஜூ
எலேய்! ராஜூக்களா சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கலே!!!!
|
நல்ல பண்பா?
நல்ல பண்புகளைக் கொண்ட விஜயேந்திரரை விமர்சிக்க விரும்பவில்லை!" : செல்லூர் ராஜூ
தமிழ் தாய்வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் இருப்பதுதான் நல்ல பண்பா
|
சயின்டிஸ்ட் அண்ணன்
விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை தியானம்தான் செய்தார். #செல்லூர்ராஜூ
சயின்டிஸ்ட் அண்ணன் சொன்னா சரியாதான் இருக்கும்..












Click it and Unblock the Notifications