ஜெயலலிதா புகைப்படங்களை போட்டோஷாப் செய்து முடித்தவுடன் வெளியிடுவாங்களோ.?
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என கர்நாடக அதிமுக (அம்மா) மாநில செயலாளர் புகழேந்தி கூறியதை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
பெங்களூரு: கர்நாடக மாநில அதிமுக அம்மா அணியின் செயலாளர் புகழேந்தி டிடிவி தினகரனுக்கும் சசிகலாவுக்கும் தீவிர விசுவாசம் காட்டி வருகிறார். தினகரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தியவர்.
தற்போது அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என கூறியுள்ளார். அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை நிர்வாகமே புகைப்படங்களை வெளியிட முடியாது என கூறியிருந்தது. இந்நிலையில் கட்சிக்காரர் ஒருவர் ஜெயலலிதா இறந்து 5 மாதங்கள் முடிந்த நிலையில் புகைப்படங்களை வெளியிடுவதாக கூறியிருப்பதை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
|
போட்டோஷாப் செய்து..
ஜெயலலிதா புகைப்படங்களை போட்டோஷாப் செய்து முடித்தவுடன் வெளியிடுவாங்களோ.???? என கேட்கிறார் இந்த நெட்டிசன்...
|
இவ்வளவு நாளா?
ஆமாம் புரோ... 150 நாட்கள் ஆயிருக்கு எடிட் பண்ண... என கூறுகிறார் இந்த வலை கலைஞர்
|
கோமால இருந்தீங்களா?
இத்தனை நாள் கோமால இருந்தீங்களா... என கேட்கிறார் இந்த நெட்டிசன்...
|
அந்த போட்டோ?
அம்மா மருத்துவமனயைில் இருந்த போது கூட இருந்தவங்க பிரியாணி சாப்பிட்டாங்களே அந்த போட்டோ போட தயாரா?


Click it and Unblock the Notifications
