தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் தாயுமானவரா? என்ன கொடுமை சார் இது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தியுள்ளனர். போதாகுறைக்கு தமிழச்சி என புகழப்பட்ட ஜூலி தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் தாயுமானவர் என தவறாக கூறி மேலும் கேவலப்படுத்தியுள்ளார்.

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பிக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சியை வைத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் கவிஞர் சினேகன் டீச்சராக இருக்க, பிக்பாஸ் குடும்பத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். அவர்கள் பாடிய விதம் தமிழ்த்தாய் வாழ்த்தை யாரும் இவ்வளவு கேவலப்படுத்தியிருக்க மாட்டார்கள்.

ஏனோ தானோவென்று பொருள் மாறும்படியான உச்சரிப்புகள் வார்த்தை மாற்றங்கள் என கொன்றுவிட்டனர். போதாகுறைக்கு தமிழச்சி தமிழச்சி எனகூறப்பட்ட ஜூலி தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் தாயுமானவர் என கூறி மேலும் கேவலப்படுத்திவிட்டார்.

இதனை வைத்துதான் இன்று நெட்டிசன்கள் ஓட்டி வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..

என்ன கொடுமை சார் இது?

தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் தாயுமானவரா? என்ன கொடுமை சார் இது? என்கிறார் இந்த நெட்டிசன்

கால்மேல் கால்..

வையாபுரி கால்மேல் கால் போட்டுக்கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறார் என்கிறார் இந்த நெட்டிசன்..

அவமதித்துவிட்டீர்கள்..

நீங்கள் எங்கள் மாநில கீதமான தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டீர்கள்.. தமிழ்த்தாய் வாழ்த்தையே குலைத்துவிட்டீர்கள்... என்கிறார் இந்த நெட்டிசன்..

யாருப்பா இந்த தாயுமானவர்...

யாருப்பா இந்த தாயுமானவர்... உண்மையிலியே தமிழ் தாய் வாழ்த்து எழுதி இருந்தா கூட இவ்ளோ ஃபேமஸ் ஆகிருக்க மாட்டார் போல... என்கிறார் இந்த நெட்டிசன்

தாங்க முடியல..

ஜூலி ஸ்ரீ மாதிரி நடிக்கிறார்.. தாங்கமுடியல.. எரிச்சலா இருக்கு.. ஜூலிய வெளிய அனுப்புங்க பிக் பாஸ் அய்யா

பாடம் நடத்தியவர்

தமிழச்சி ஜூலி தமிழ்த்தாய் வாழ்த்த எழுதினது தாயுமானவர் என சொல்கிறார்.. இவர் தான் ஜல்லிக்கட்டின் போது தமிழர் கலாச்சாரம் குறித்து பாடம் நடத்தியவர் என்கிறார் இந்த நெட்டிசன்..

இது என்ன சோதனை

இது என்னடா தமிழ்த்தாய் வாழ்த்துக்கு வந்த சோதனை.. என்கிறார் இந்த நெட்டிசன்..

ஆங்கிலோ இந்தியன் பள்ளி

தமிழ்த்தாய்வாழ்த்து எழுதியவர் தாயுமானவர். ஆங்கிலோ இந்தியன் பள்ளி லட்சணங்கள் நல்லாவே புரிஞ்சது என்கிறார் இந்த நெட்டிசன்..

சிநேகன் என்ற கவிஞன் இருந்தும்

சிநேகன் என்ற கவிஞன் இருந்தும் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியது தாயுமானவர் என்று ஜூலி கூறுகையில் அதை திருத்தவில்லை.. என்கிறார் இந்த நெட்டிசன்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens shows anger on Vijay tv and Julie for degrading Tamil thaivazhthu in the Bigboss program.
Please Wait while comments are loading...