இதை கேட்க அந்த அம்மா இருந்திருக்கனும்...!
மோடி இருக்கும் வரை எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: மோடி இருக்கும் வரை எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாய்க்கு வந்ததை பேசி அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தனியார் பால் நிறுவனங்களை குற்றம் சாட்டியது தொடர்பான வழக்கில் அவர் பால் நிறுவனங்கள் குறித்து இனி பேசக்கூடாது என தடை விதித்தது.
இந்நிலையில் மோடி இருக்கும் வரை எங்களை ஒன்றும் செய்ய முடியாது, இரட்டை இலை எங்களுக்குதான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். இதனை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள்..
|
ஒன்றும் செய்ய முடியாது
அதுவேனும்னா உண்மைதான்.. மோடி இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது.. ஆனா மோடி கூட சேந்தா மக்கள் உங்கள ஏத்துக்க மாட்டாங்க.. என்கிறார் இந்த வலைஞர்
|
எவ்வளவுதான் சமாளிக்கிறது?
எடப்பாடி: இவரு எதை பத்தியும் பேச கூடாதுன்னு கோர்ட் தடை போட்டிருக்கலாம்.நானும் எவ்வளவு பிரச்சினைகளை தான் சமாளிக்கிறது. ஐஆம் பாவம்... என்கிறது இந்த டிவிட்
|
அந்த அம்மா இருந்திருக்கனும்
இதை கேட்க அந்த அம்மா இருந்திருக்கனும்... என்கிறார் இந்த நெட்டிசன்
|
விதியை பார்த்திங்களா..
என்னாது...... ட்ரம்மா.... விதியை பார்த்திங்களா.. அம்மா அம்மானு வாய் நிறைய சொல்லுவிங்களே... இப்போ மோடி மோடினு வாய் நிறைய சொல்றிங்களே.. என்கிறார் இந்த வலைஞர்
|
இணைப்பு எப்போது?
என்ன மொத்தமா வித்துட்டிங்களா? இணைப்பு எப்போது? என கேட்கிறார் இந்த நெட்டிசன்..
|
பாஜவினர்தான் மிரட்டுவாங்க
ஆமாமா வேற யாரும் மிரட்ட முடியாது அவரும் பாஜக வினர் மட்டும் தான் மிரட்டுவாங்க... என்கிறது இந்த டிவிட்












Click it and Unblock the Notifications