டிடிவியை விட்டு போகவேமாட்டேன்னு சொன்னதெல்லாம்?... நாஞ்சிலாரை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!

டிடிவி. தினகரன் அணியில் இருந்தும் அரசியலில் இருந்துமே விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நாஞ்சிலாரை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!- வீடியோ

    சென்னை: டிடிவி. தினகரனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்த நாஞ்சில் சம்பத், அவரது அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இனி எந்த அரசியல் கட்சியிலும் சேர விரும்பவில்லை, தமிழ் பணியை தொடர இருப்பதாகவும் நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளது குறித்து சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    திமுக, மதிமுக, அதிமுக, கடைசியில் டிடிவி. தினகரன் ஆதரவாளர் என்று நாஞ்சில் சம்பத் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். டிடிவி. தினகரன் சொல்வது அனைத்தும் வேதவாக்கு என்பது போல ஊடகங்கள் முன்பு அடுக்குமொழி வசனங்களை பேசி தினகரனை புகழ்ந்து தள்ளினார்.

    டிடிவி. தினகரனை புனிதர், அதிமுகவின் எதிர்காலம் என்றெல்லாம் புகழ்ந்தவர் இன்று டிடிவி. தினகரன் அண்ணாவும், திராவிடமும் இல்லாத கட்சியை அறிவித்திருக்கிறார். பட்டப்பகலில் பச்சைப்படுகொலை செய்துள்ளார் தினகரன் என்றும் நாஞ்சில் சம்பத் வெடித்துள்ளார், தினகரன் அணியில் இருந்து விலக நாஞ்சில் சம்பத் கூறிய காரணங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவற்றின் சில தொகுப்புகள் இதோ :

    எல்லாரும் திட்டினா எப்படி?

    நாஞ்சில் சம்பத் விலகல் அரசியலுக்கு முழுக்கு என செய்திகள் வருகின்றன. ஆமா பின்ன அசத்தப் போவது யாரு நிகழ்ச்சி போல எவ்வளவு காமெடி பண்றாரு யாராவது பாராட்டுறீங்களா எல்லோரும் திட்டினா எப்படி? என்று கேட்டுள்ளார் இவர்.

    விரைவில் ஏதாவது கட்சியில்

    நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து விலகினாரா என்பதற்கு இந்த வலைபதிவர் ஒரு பதிலை ட்வீட்டியுள்ளார். விலகல்வேறு, ஓய்வு வேறு. நீங்க வேண்டுமானால் பாருங்க. விரைவில் எதாவது ஒரு கட்சியில் சேர்ந்து பேச்சாளராகிவிடுவார் என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஊழல் வியாதிகளின் முகம்

    என் உயிர் இருக்குற வரைக்கும் இனி டிடிவி அணிய விட்டு போக மாட்டேனு சொன்னதெல்லாம் என்ன ஆச்சு ? ? இது தான் மக்களே #ஊழல் வியாதிகளின் முகம் என்று கேட்டுள்ளார் இவர்.

    டிரம்ப் கூப்பிட்டதாக சொன்னாலும் சொல்வார்

    அண்ணாவும் திராவிடமும் இல்லாத இடத்தில் நான் இல்லை என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். டிரம்ப் கட்சில இருந்து அழைப்பு வந்திருக்குன்னு சொன்னாலும் சொல்லுவார் என்று நக்கலடித்துள்ளார் இந்த வலைபதிவர்.

    கூலியாவது கொடுக்கனுமில்ல?

    இன்னோவா ஓட டீசல் போடலனாலும் பொழப்பு ஓட கூலியாவது கொடுக்கனுமில்ல கூலியும் இல்லனா எப்படி என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். அதிமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத்திற்கு இன்னோவா கார் கொடுக்கப்பட்டிருந்தது, அதனை அண்மையில் தான் கட்சி அலுவலகத்தில் நாஞ்சிலார் ஒப்படைத்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+