'எப்புட்றா'.. கார் வந்தது... கடை திறந்திருந்தது.. கடையிலேயே இது எப்படி இப்படி?
சென்னை: 'எப்புட்றா' என்று ஒரு சிறுவன் ஆச்சர்யத்துடன் கேட்பான், அந்த மீம்ஸ் டெம்பளட் இன்று பல மீம்ஸ்களில் பகிரப்படுகிறது. நிஜமாகவே சில விஷயங்கள் நமக்கே ஆச்சர்யமாக தோன்றும்.. அப்படியான ஒரு விபத்து வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதனை இப்போது பார்ப்போம்.
இன்றைக்கு சமூக ஊடகங்கள் பல விஷயங்களை பற்றி பேசுகின்றன. இதில் நல்லதும் இருக்கிறது.. கெட்டதும் இருக்கிறது. சமூக ஊடங்களில் ஆதிக்கம் செலுத்துவோர் செய்வது தான் செய்திகளாக மாறும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. வரும் காலங்களில் ஊடகங்களைவிட சமூக ஊடகங்களே கட்டி ஆளப்போகின்றன.

சமூக ஊடகங்களில் பகிரப்படுவது உண்மையோ, பொய்யோ அது இரண்டாவது தான். முதலில் வேகமாக பரவும். அப்புறம் தான் அது பொய் செய்தி என்பதே மக்களுக்கு போய் சேரும். அதேநேரம் அதிகப்படியான பொய் செய்திகள் காரணமாக மக்கள் இப்போது முன்பு விட அதிக கவனமாக சமூக ஊடங்களில் இருக்கிறார்கள்.
சமூக ஊடங்களில் செய்திகளை தாண்டி மீம்ஸ்தான் கொடி கட்டி பறக்கிறது. வீடுகளில், ஊர்களில் புரணி பேசுவது போல், வார இறுதிகளில் கண்டட்தேடி அலைகிறார்கள். சிக்குவோரை வச்சு செய்கிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், திரை நட்சந்திரங்கள் என யாராக இருந்தாலும் இவர்களிடம் சிக்கி அடிவாங்குவது தொடர்கிறது.
எப்புட்றா 😂😂😂 pic.twitter.com/SeGkgkvoVV
— ATC New (@atcspaces) December 23, 2023
அதேபோல் சமூகஊடங்கள் தான் மக்களின் பிரச்சனைகளை ஆழமாக விவாதிக்கின்றன.. தூத்துக்குடி வெள்ளமாகட்டும், சென்னை நிஜாம்புயல் மழையாகட்டும், வெள்ள பாதிப்பு தொடர்பான அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பேட்டிகள் ஆகட்டும் எல்லாமே சமூக ஊடகங்களில் கடுமையாக விவாதிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் மீம்ஸ் மூலம் கேலி கிண்டல் நையாண்டி என எல்லாமே வேறலெவலில் இருக்கும்.
இந்நிலையில் 'எப்புட்றா' பாணியில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கார் ஒன்று டயர் கடையை நோக்கி வந்து கொண்டிருந்தது. திடீரென டயர் நேராக கழன்று வந்து டயர் கடைக்குள்ளே சரியாக டயர் கழண்டு வந்து விழுகிறது. எந்த ஊர் என்று தெரியவில்லை..அண்மையில் நடந்த சம்பவம் போல் தான் இருக்கிறது. அதை பார்த்து தான் நெட்டிசன்கள் எப்புட்றா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications