நானெல்லாம் ரூ. 500க்கு புது தோசைக்கல்லு வாங்கவே திணறுறேன்.. நீங்க மட்டும் எப்டிடா?
சென்னை : சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து மீண்டும் அலுவலகம் செல்வதென்றாலே நம் மக்களுக்கு மனசு, உடம்பு என எல்லாம் வலிக்கும். இதில் தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் பிறகு திங்கட்கிழமை அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் கேட்கவா வேண்டும். மீம்ஸ் போட்டு விதவிதமாய் புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
ஞாயிறு மாலையில் இருந்தே, திங்கட்கிழமையை நினைத்து கொஞ்சம் அப்செட்டாக ஆரம்பித்து விடுவார்கள் நம் மக்கள். விடுமுறை முடிந்து மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டுமே என்ற கவலை அப்போதே அவர்களுக்குள் வந்து தானாக ஒட்டிக் கொள்ளும். அதிலும் நீண்ட விடுமுறை நாட்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

அதனால்தான், நீண்ட விடுமுறை நாட்கள் முடிந்த பிறகு, வெளியூருக்குச் சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மாதிரி, சமூகவலைதளப் பக்கங்களிலும் மீம்ஸ்கள் நிரம்பி வழிய ஆரம்பித்து விடும். "அப்போலாம் திங்கட்கிழமை ஸ்கூலுக்கு போகணுமேனு.. இப்பலாம் திங்கட்கிழமை ஆபிசுக்கு போகணுமேனு.. ஆக மொத்தம் இந்த திங்கட்கிழமையை எப்பவுமே நமக்குப் பிடிக்கறதில்லை" என மீம்ஸ் போட்டு திங்கட்கிழமையை திட்டி வருகின்றனர்.
கூடவே, "ரெசியூம்ல கான்டாக்ட் டீடெயில்ஸ் மட்டும்தான் என்னுது.. மத்த எல்லாம் செட்டப்பு.. அவ்வளவும் ஏஐ எடிட்டு!" என்றும், "நானெல்லாம் புது தோசைக்கல்லு ரூ. 500க்கு வாங்கவே திணறுறேன்.. நீங்க மட்டும் எப்டிடா?" என்றும் புதிதாக வேலை தேடுபவர்களையும், ஏற்கனவே பார்க்கும் வேலையில் சம்பளம் பத்தவில்லை எனப் புலம்புபவர்களையும் வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications