யாருடா நீ.. இந்த வெள்ளத்துல வந்து இருட்டுக்கடை அல்வா கிடைக்குமானு கேட்டுட்டு இருக்க?
சென்னை: மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல், மழை ஓய்ந்து விட்ட போதும், மழை பற்றிய மீம்ஸ்களை நெட்டிசன்கள் விடுவதாக இல்லை. தற்போது அவற்றில் நகைச்சுவையோடு, கொஞ்சம் சிந்திக்க வைக்கும்படியான கருத்துக்களையும் அவர்கள் பகிர்ந்து வருவது ரசிக்கும்படி உள்ளது.
சென்னையில் உள்ள அதிகப்படியான மக்கள் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான். இந்த டிசம்பர் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது அவர்கள்தான். இங்கு சென்னையில் தான் மழை என சொந்த ஊருக்குச் சென்றவர்கள், அங்கும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உள்ளக் குமுறல்களை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.

கூடவே, திருநெல்வேலி என்றாலே எப்போதும் டக்கென நினைவில் வரும் இருட்டுக்கடை அல்வாவையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. அதையும் மீம்ஸ்களில் சேர்த்து நகைச்சுவையின் சுவையை மேலும் கூட்டியுள்ளனர்.
வடமாவட்டங்களைவிட தென் மாவட்டங்கள்தான் அடிக்கடி ஜாதிப் பிரச்சினைகள் பற்றிய செய்திகளால் ஊடகங்களில் அடிபடும். சைடு கேப்பில் அப்படி ஜாதி, ஜாதி என அலைந்தவர்கள் தலையிலும் மீம்ஸ் எனும் ஆயுதத்தால் நன்றாக குட்டி இருக்கின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications