பச்ச தண்ணீ எப்படி பொங்கும்? சென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. டிரெண்டாகும் வானிலை மீம்ஸ்!
சென்னை: சென்னையில் அதிகாலையில் இருந்து விடாத கனமழையும், குளிரும் அடித்து வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றன.
கடந்த ஒன்றரை மாதமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயில் அதிகரித்து வந்தது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் விடாமல் பதிவானது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

முக்கியமாக சென்னையில் 10 நாட்களாக விடாமல் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானது. இந்த நிலையில் தற்போது திடீரென சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் விடாமல் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. விடா மழை காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகாலையில் இருந்து விடாத கனமழையும், குளிரும் அடித்து வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றன. சென்னைதான் இனி ஊட்டி.. சென்னை சுவிட்சர்லாந்து மாதிரி இருக்கு.,. ஆமா ஆமா ஊட்டியில் இருந்துதான் பேசுறேன் என்றெல்லாம் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

முக்கியமாக சென்னையில் அடிக்கும் குளிரை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். நேற்று இரவு புழுக்கமான வானிலையுடன் தூங்க சென்றவர்களுக்கு அதிகாலையில் கும்மிருட்டான வானிலையை பார்த்ததும் இது சென்னையா? ஊட்டியா? என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

சென்னையில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது என்பதை வைத்தும் மீம்ஸ் போட்டு உள்ளனர். மேலும் மழையில் அலுவலகம் செல்ல முடியாத நிலையை வைத்தும் நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டுள்ளனர்.

மழை அளவு: சென்னையில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14 செமீ மழை பெய்துள்ளது. அதேபோல் பின் வரும் மாவட்டங்களில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது.
நந்தனம் - 11.7 செ.மீ. தரமணி - 11.7 செ.மீ. செம்பரம்பாக்கம் 10.9 செ.மீ - மேற்கு தாம்பரம் - 8 செ.மீ. நுங்கம்பாக்கம் - 6.7 செ.மீ. சென்னை தவிர்த்து காஞ்சிபுரம் - 7.9 செ.மீ. திருவள்ளூர் - 5 செ.மீ. மாவட்டங்களில் ஆகிய அளவு மழை பதிவாகி உள்ளது.

மழை எங்கே: சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது

அதிகாலையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இது போக நேற்று நள்ளிரவிற்கு பின் அதிகாலை வரை திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இங்கு இரவில் தொடங்கிய மழை தற்போது வரை விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications