பைசாவில் பஸ் கட்டணம் குறைப்பு... அடேங்கப்பா எவ்ளோ பெரிய பரிசு

ரூபாய்களில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் பைசாக்களில் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு ட்விட்டர், ஃபேஸ்புக்கில் சமூகவலைத்தளவாசிகள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஸ் கட்டணம் ஏற்றியது ருபாய் கணக்கில் குறைப்பு பைசா கணக்கில் என்ன ஏமாற்று வேலை என்று சமூகவலைத்தளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் கடந்த வாரம் உயர்த்தப்பட்டது. ஜல்லிக்கட்டு புரட்சி போல தமிழகத்தில் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த பல கல்லூரிகளில் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று சில பைசாக்களை மாநில அரசு குறைத்துள்ளது.

பைசாவில் குறைப்பு

அடேங்கப்பா...எவ்வளவு பெரிய பரிசு... சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைப்பு பஸ் கட்டண குறைப்பு நாளை முதல் அமல் என்று பதிவிட்டுள்ளார் இந்த வலைஞர்.

மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்

டீசல் விலை உயர்ந்தால் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதை விடுத்து மாநில அரசு பஸ் கட்டணத்தை உயர்த்துவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் இந்த நெட்டிசன்.

என்னா ஒரு ரியாக்சன்

பஸ் கட்டண குறைப்புக்கு இவர் பதிவிட்டுள்ள வீடியோ ஆயிரம் அர்த்தங்களை கூறுகிறது.

இப்படி குறையுதே

பஸ் கட்டணம் உயரும் போது எம்எல்ஏ சம்பளம் மாதிரி உயருது. பஸ் கட்டணம் குறைப்பு மட்டும் பெட்ரோல் விலை குறைப்பு மாதிரி பைசாவுல இருக்கு!!!

காசு மிச்சமாகும்

தமிழக அரசு கண்துடைப்பு நாடகம் பஸ் கட்டணம் ஏற்றியது ருபாய் கணக்கில் குறைப்பு பைசா கணக்கில் என்ன ஏமாற்று வேலை. கட்டணம் குறையும் என்ற காலம் போய், காசு மிச்சமாகும் என்ற காலத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+