Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jana nayagan memes | 'டெல்லியா தமிழ்நாடா என்று கேட்ட எனக்கே சான்றிதழ்.. அப்படி என்னதான் கேட்ட'.. ஜன நாயகன் மீம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு இன்னமும் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.. நீதிமன்றமே 10ம் தேதிக்கு படத்தை தள்ளிவைக்க முடியுமா என்று கேட்டது. இந்நிலையில் பராசக்தி, ஜனநாயகன் குறித்த மீம்ஸ் வெளியாகி உள்ளன. அதில் டெல்லியா தமிழ்நாடா என்று கேட்ட எனக்கே சான்றிதழ் தந்துவிட்டார்கள்.. அப்படி நீ (ஜனநாயகன்) என்னதாண்டா கேட்டுவச்ச என்று கேட்பதாக மீம்ஸ் உள்ளது.

கே.வி.என். என்ற நிறுவனம் மிகவும்பிரம்மாண்டமாக சுமார் 500 கோடி செலவில் ஜனநாயகன் திரைப்படத்தை தயாரித்துள்ளது. இதில் நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எச்.வினோத் இயக்கியுள்ள இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படம் வருகிற 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.தணிக்கை சான்றிதழ் இல்லாத காரணத்தால் படம் குறிப்பிட்ட ஜனவரி 9ம் தேதி வெளியாகும் வாய்ப்பு குறைவு தான்.

They branded me a rebel just for asking Delhi or Tamil Nadu What did you ask Jana nayagan memes

ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பங்கள் தரப்பட்ட நிலையில், இன்று வரை சென்சார் போர்டு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரோடக் ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருக்கிறது . இந்த வழக்கை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா நேற்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்தார்.

அப்போது ஜனநாயகன் திரைப்பட நிறுவனம் தரப்பில் மூத்த வக்கீல் சதீஷ் பராசரன், வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர், ''ஜனநாயகன் படம் சுமார் ரூ.500 கோடி செலவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், 22 நாடுகளில் 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதற்காக தணிக்கை சான்றிதழ் கேட்டு கடந்த டிசம்பர் 18-ந்தேதி விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை தணிக்கை வாரிய உறுப்பினர்கள் பார்த்தார்கள்.

பின்னர், இந்த படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்படும் என்றும், அதற்காக சில காட்சிகளை நீக்கவேண்டும். சில வசனங்களை மவுனமாக்க வேண்டும் என்று மண்டல தணிக்கை வாரிய அலுவலர் கடந்த டிசம்பர் 22-ந்தேதி உத்தரவிட்டார்.

இதை ஏற்றுக்கொண்டு, அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. வசனங்களும் மவுனமாக்கப்பட்டன. இதையடுத்து, தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டிய நிலையில், திடீரென அந்த படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள் குறித்து புகார் வந்துள்ளது. அதனால், இந்த திரைப்படத்தை தணிக்கை வாரியத்தில் உள்ள மறுஆய்வு குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்று நேற்று முன்தினம் இ-மெயில் மூலம் தணிக்கை வாரிய தலைவர் தகவல் அனுப்பி இருக்கிறார்.

ஜனநாயகன் திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அந்த படத்தை யாரும் பார்க்கவும் இல்லை. அப்படி இருக்கும்போது, அந்த படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள் குறித்து புகார் செய்ய வாய்ப்பே இல்லை. யார் அப்படி ஒரு புகாரை கொடுத்துள்ளனர் என்பதும் தெரியவே இல்லை..

அதுமட்டுமல்ல, யு/ஏ சான்றிதழுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரே, மறுஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்பி வைக்க அதிகாரம் கிடையாது. இன்னும் 3 தினங்களில் உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் வெளியாக போகிறது. எனவே தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பது ஏற்புடையதல்ல. எனவே, தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று வாதிட்டார்கள்.

தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், "ரூ.500 கோடிக்கு எடுத்த படமாக இருந்தாலும், ஒரு கோடி ரூபாய்க்கு எடுத்த படமாக இருந்தாலும், தணிக்கை வாரியத்துக்கு அனைத்து திரைப்படங்களும் ஒன்றுதான். மனுதாரர் 9-ந்தேதி திரைப்படத்தை வெளியிடுவதாக அறிவித்து விட்டார் என்பதற்காக அவருக்கு தணிக்கை சான்றிதழ் உடனே வழங்கி விடவேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது.

மத உணர்வை புண்படுத்தும் விதமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் வந்துள்ளது. எனவே மறுஆய்வு குழுவுக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. தணிக்கை வாரியம் சட்டப்படிதான் செயல்படுகிறது. இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். விசாரணையை நாளை (வியாழக்கிழமை) தள்ளிவைக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை இன்று பிற்பக சாரணைக்கு எடுக்கப்படும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அப்போது ஜனநாயகன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ள புகார் மனு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தணிக்கை வாரியம் தாக்கல் செய்யவேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

இந்த நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுத்து, டெல்லிக்கு எதிராக வசனங்கள் இடம் பெற்றிருந்த பராசக்தி படத்திற்கே தணிக்கை சான்றிதழ் யுஏ கிடைத்துவிட்டது. ஆனால் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று சொல்லப்படும் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு ஏன் தணிக்கை வாரியம் திடீரென சான்றிதழ் வழங்க மறுக்கிறது என்று கேள்விகளை பலர் எழுப்பி வருகிறார்கள்.

மத உணர்வை புண்படுத்தும் விதமாக தணிக்கை வாரியம் புதிய குற்றச்சாட்டை கூறியுள்ள நிலையில், அப்படி என்ன தான் காட்சிகள் இருக்கிறது என்று மீம்ஸ் மூலம் கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள். படத்தில் நான் ஆணையிட்டால் பாடலை விஜய் பாடியபடி அரசியல்வாதிகளை சாட்டையால் தாக்குவது போல் ஒரு காட்சியும், ஓம் என்று ஒரு சொல்லும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த அளவிற்கு இது உண்மை என்று தெரியவில்லை. இது காரணம் என்று ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+