கல்லூரி செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய ஹேஷ்டேக், மீம்ஸ்கள்.. அடேங்கப்பா நெட்டிசன்ஸ் முடியலையே!
சென்னை: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததைப் போல கல்லூரி செமஸ்டர் தேர்வுகளையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மீம்ஸ்கள், ஹேஷ்டேக்குகள் மூலம் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் 15-ந் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைத்தனர். எதிர்க்கட்சிகளும் இதே கோரிக்கையை முன்வைத்து போராட்டங்களையும் அறிவித்தன.

10-ம் வகுப்பு தேர்வு ரத்து
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மக்களுக்கு உரையாற்றினார். அப்போது கொரோனா பாதிப்பு தொடருவதால் பெற்றோர் கோரிக்கையை ஏற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.

செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் நன்றி தெரிவித்துள்ளன. பெற்றோர்களும் மாணவர்களும் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதைப் போல தங்களது செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கல்லூரி மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை #CancelTNSemesterExams என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.

ராமு ஜானுவை பிரித்த எக்ஸ்டாம்
அத்துடன் சமூக வலைதளங்களில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மீம்ஸ்களையும் தெறிக்கவிட்டு வருகின்றனர் கல்லூரி மாணவர்கள். 96 திரைப்படத்தில் ராமுவும் ஜானுவும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய பின்னர் வெவ்வேறு ஊர்களுக்கு பிரிந்து சென்றுவிடுவர். இருவரது காதலும் ஏக்கத்துக்குரியதாக இருந்துவிடும். இதை கான்செப்ட்டாக வைத்து கலக்கி இருக்கின்றனர்.

அங்க புதுவையில் எல்லாம்..
அதேபோல் தமிழகத்தைப் பின்பற்றி புதுவையிலும் 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டது. ஆனால் புதுவையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இதனால் புதுவையை பின்பற்றி தமிழகத்திலும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்தாகுமா என்கிற எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது இந்த மீம்ஸ்.

எங்களுக்கும் ஏதாவது...
மற்றொரு மீம்ஸில் ஏதோ நாங்களும் இருக்கிறோம்.. எங்களுக்கும் ஏதோ பார்த்து செய்யுங்க முதல்வரே என கல்லூரி மாணவர்கள் வேண்டுகோள் வைப்பது போல் உருவாக்கப்பட்டிருக்கிறது. சார் அப்படியே எங்களுக்கும் ஏதாவது பார்த்து பண்ணிவிடுங்க என்கிறது இன்னொரு மீம்ஸ்.
|
செம வீடியோக்கள்
இந்த கோரிக்கையை நெட்டிசன்கள் பாட்டாகவே பாடிவிட்டனர் என்கிற கதையாக இந்த வீடியோக்களை சொல்லலாம்.. என்ன பெர்பார்மன்ஸு. என்னா யோசனை.. யப்பா..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், முடியலை சாமீகளா
|
ஆரத்தியே எடுத்திட்டான்யா
இன்னொரு வீடியோ இது.. முதல்வர் எடப்பாடியின் அறிவிப்பு தொடர்பான டிவி செய்திக்கு ஆரத்தியே எடுத்து சாமி கும்பிடும் காட்சி இது. என்னங்கடா இது! எவ்வளவு நேரமாப்பா சிரிச்சுகிட்டே இருக்கிறதுன்னு கேட்கிற வைக்கிறார்களே இந்த நெட்டிசன்ஸ் சுட்டீஸ்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications