இந்த ஒரு வீடியோ போதுமே.. உலகக் கோப்பை பைனல் பற்றி புட்டு புட்டு வச்சிட்டாங்களே.. டிரெண்டான மீம்
சென்னை: 2023 உலகக் கோப்பை பைனல் தொடர்பாக வீடியோ மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூஸிலாந்திற்கு எதிரான செமி பைனலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா பேட்டிங் எடுத்து தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது. முதல் பவர் பிளேவில் 10 ஓவர்களுக்கு 84 ரன்களை இந்திய அணி எடுத்தது.

இதை தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயரும் சதம் அடித்தார். வெறும் 70 பந்தில் 8 சிக்ஸ், 4 பவுண்டரி அடித்து 105 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 50 ஓவரில் 397-4 ரன்கள் எடுத்தது. இதையடுத்து நியூசிலாந்து இறங்கி பேட்டிங் செய்தது. இதையடுத்து இறங்கிய நியூசிலாந்து 327-10 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஷமி மட்டும் 7 விக்கெட் எடுத்தார்.
இந்த நிலையில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையே பைனல்ஸ் நடக்க உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உறுதியாக உள்ளது. ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதால் கிட்டத்தட்ட இந்த உலகக் கோப்பை 2003 உலகக் கோப்பை போல மாறிவிடும். அதில் பைனலில் நாம் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தோம். அது நடக்காமல் இருக்க பின்வரும் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
முக்கியமாக செமி பைனல், பைனல் என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியாவின் ஆட்டம் வேறு மாதிரி இருக்கும். நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியா உயிரை கொடுத்து ஆடுவது வழக்கம். இதனால் இன்று நடக்கும் போட்டிக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
**Australia almost never loses in ICT finals**
— Arun Pandiyan (@ArunPandiyanMJ) November 18, 2023
Rohit Sharma tomorrow: pic.twitter.com/EUpv8uh6gZ
மீம்: 2023 உலகக் கோப்பை பைனல் தொடர்பாக வீடியோ மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவை எப்படியாவது வெல்ல வேண்டும்.. எதையாவது செய்து வெல்ல வேண்டும் என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
அதே அர்த்தத்தில் வீடியோ மீம் ஒன்று போடப்பட்டு உள்ளது. அவனை ஜெயிக்கணும் யோசிங்க.. யோசிங்க.. நீ யோசி.. நீ யோசி என்று சொல்வது போல் மீம்ஸ் போடப்பட்டு உள்ளது. இந்திய அணி எப்போதுமே லீக் ஆட்டங்களில் நன்றாக ஆடி உள்ளது. ஆனால் செமி, பைனல் போன்ற நாக் அவுட் போட்டிகளில் தோனிக்கு பின்பாக எந்த கேப்டனும் சரியாக ஆடவில்லை. அந்த அழுத்தம் இப்போதும் இந்திய அணிக்கு இருக்கும். அதை சரி செய்ய இந்திய அணி கஷ்டப்பட வேண்டும். இதுவே பெரிய அழுத்தத்தை இந்திய வீரர்களுக்கு கொடுக்கும்.
இந்தியா வெற்றி மிதப்பில் இருக்க கூடாது. வரிசையாக இந்தியா வென்றுவிட்டது. 10க்கு 10 போட்டிகளில் வென்றுவிட்டது. இந்திய அணியின் தொடர் வெற்றிகள் முக்கியமான ஆபத்து ஆகும். இதே மனநிலையோடு போனால் திடீர் தோல்விக்கு அது காரணம் ஆகும். ஏனென்றால் இந்திய வீரர்கள் என்று இல்லை தொடர் வெற்றிக்கு யாருக்குமே மிதப்பை கொடுக்கும். அந்த மிதப்பு காரணமாக வீரர்கள் சொதப்ப வாய்ப்பு உள்ளது. இந்த மனநிலையை ரோஹித்தான் மாற்ற வேண்டும். ஒரு தோல்வியாவது இருந்திருந்தால் பயம் வந்திருக்கும். ஆனால் அந்த பயம் இப்போது அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications