ஒரு நிமிடம்.. இதயமே நின்னுடுச்சு.. தமிழ்நாடு அரசு அனுப்பிய எமர்ஜென்சி அலர்ட்.. ட்ரெண்டான மீம்ஸ்!
சென்னை; இன்று தமிழ்நாட்டில் உள்ள ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் எமர்ஜென்சி மெசேஜ் அனுப்பப்பட்டது . இந்த நிலையில் இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை தமிழ்நாடு அரசு மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, மேம்படுத்தவும், பேரிடர்களின் போது பொதுமக்களின் அவசரகால பாதுகாப்பு தகவல்தொடர்புகளை மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை ஓட்டம் எதிர்வரும் இன்று நடத்தப்பட உள்ளது.

"செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" தொழில்நுட்பமாகும். இதில் ஒரு முறை என்பது ஒரு அதிநவீன செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்பேசிகளுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது. அதை இன்று சோதனை செய்தனர்.
( உங்க போனுக்கு தமிழ்நாடு அரசு அனுப்ப போகும் மெசேஜ்.. கவனமாக பார்த்துக்கோங்க.. ரொம்ப முக்கியம்)
மீம்ஸ்: இந்த நிலையில் இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். நாங்கள் நிம்மதியாக தூங்க போகும் நேரத்தில் திடீரென இந்த மெசேஜ் வந்தது. சட்டென பதற்றம் ஆகிவிட்டது என்று நெட்டிசன் ஒருவர் மீம் போட்டுள்ளார்.

இன்னொருவர்.. இதை கேட்டதும் ஒரு நிமிடம் அப்படியே ஷாக் ஆகிட்டேன் என்று கூறியுள்ளார்., அதேபோல் இன்னொருவர் எனக்கு ஒரு நிமிஷம் இதயமே நின்னு போயிடுச்சு.. அந்த அளவிற்கு அதிர்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் மத்திய அரசு இதை சோதனை செய்தது. இந்த நிலையில் மாநில அரசு மீண்டும் சோதனை செய்துள்ளது. இதை குறிப்பிட்டுள்ள ஒருவர்.. அடிக்கடி இப்படி சோதனை செய்வது சரியில்லை. ஒருமுறை, இரண்டு முறை என்றால் ஓகே. அடிக்கடி இப்படி ஏன் சோதனை செய்கிறீர்கள்? என்று மீம் போட்டு கேட்டுள்ளார். ஒருமுறை அனுப்புவதே அதிகம்.. இதில் இவர்கள் தமிழில் ஒருமுறை.. ஆங்கிலத்தில் ஒருமுறைக்கு அனுப்பி சோதனை செய்கிறார்கள்;.

சோதனை: இந்த சோதனை அடிப்படையில் இன்று எல்லோருக்கும் அடுத்தடுத்து குறிப்பிட்ட நேர இடைவெளியில் ஆங்கிலம் மற்றும் தமிழில் மெசேஜ் அனுப்பப்பட்டது.
கடுமையான வானிலை எச்சரிக்கைகள் (எ.கா., சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்றவை) பொதுப் பாதுகாப்புச் செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" பயன்படுத்தப்பட உள்ளது. இத்தொழில்நுட்பம் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாக தெரிவிக்க பயன்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பில் தொடர்ச்சியான உறுதிப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரிடமும் "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" அமைப்பின் சோதனையினை 20.10.2023 இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடத்தப்பட்டு உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications