கரிகாலன் "ஸ்கை".. வந்தியத்தேவன் "அர்ஷிதீப்".. தென்னாப்பிரிக்காவை வெளுத்த இந்தியா! டாப் மீம்ஸ் இதோ!
சென்னை: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வென்றதை வைத்து பல மீம்ஸ்கள் போடப்பட்டு வருகின்றன.
நேற்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 4 வீரர்கள் டக் அவுட் ஆன நிலையில் 108 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது.
அதன்பின் இறங்கிய இந்திய அணி சூர்யா குமார் அதிரடியால் சிறப்பாக ஆடியது. 2 விக்கெட்டுகளை இழந்து 16.4 ஓவரில் இந்திய அணி வென்றது.
கரிகால சோழன் போல உறுதியாக ஆடிய சூர்யா குமார் யாதவின் பேட்டிங் காரணமாகவும்.. வந்தியத்தேவன் போல குதிரை வேகத்தில் துடிப்பாக ஆடிய அர்ஷிதீப் சிங் பவுலிங் காரணமாகவும் இந்திய அணி எளிதாக இந்த போட்டியில் வென்றது.

9 ரன்னுக்கு 5 விக்கெட்
நேற்று தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது. 9 ரன்கள் எடுத்த போதே அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து விட்டது. 4 வீரரக்ள் நேற்று அந்த அணியில் டக் அவுட் ஆனார்கள். அதில் 3 வீரரக்ள் ஒரு பந்து மட்டுமே பிடித்து அவுட் ஆனார்கள். கண்களை மூடி திறக்கும் முன் அந்த அணி வீரர்கள் அவுட் ஆனதை வைத்து பல மீம்ஸ்கள் போடப்பட்டு வருகின்றன.

ராகுல்
கே.எல் ராகுல் நேற்று 50 ரன்கள் எடுத்தாலும் மிக மிக மோசமாக ஆடினார். 80 ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார். ஐபிஎல் போட்டியிலும் அவர் இப்படித்தான் ஆடுவார். அணி வெல்ல வேண்டும் என்று அவர் ஆடுவது இல்லை என்று புகார் உள்ளது . மாறாக அவர் தனது தனிப்பட்ட ரன்களை எடுக்க வேண்டும் என்றுதான் ஆடுகிறார் என்று புகார் உள்ளது. தொடக்கத்தில் வேகம் காட்டாமல், கடைசியில் 2-3 சிக்ஸர்களை அடித்தால் வென்றுவிடலாம் என்று இவர் ஆடும் விதம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

மிக மோசமான பேட்டிங்
நேற்று போட்டியில் இவரின் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆட்டம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. ஆசிய கோப்பை தொடரிலும் இவர் சரியாக ஆடவில்லை. நேற்று எதோ குறைவாக ஸ்கோர் இருந்ததால் இந்தியா வென்றது. இதுவே மற்ற போட்டியாக இருந்தால் அவரின் ஆட்டமே இந்திய அணிக்கு எதிராக திரும்பி இருக்கும். இவருக்கு பதிலாக பண்டை ஓப்பனிங் வீரராக களமிறக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதை வைத்தும் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

உலகக் கோப்பை வீரர்கள்
இந்திய அணியில் நேற்று அர்ஷிதீப் சிங் நன்றாக ஆடினார். அதேபோல் சாகர் சிறப்பாக பவுலிங் செய்தார். ஆனால் இவர்களுக்கும் உலகக் கோப்பையின் போது ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அஸ்வினும் நன்றாக பவுலிங் செய்தார். ஆனால் பெரும்பாலும் ரோஹித் சர்மா தனது அணியில் புவனேஷ்வர் குமார் , சாஹல் ஆகியோருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பார். இதனால் உலகக் கோப்பையில் இந்திய அணியின் பவுலிங் இதுபோல மேஜிக் செய்யுமா என்ற கேள்வி உள்ளது.

ஸ்கை பேட்டிங்
இந்திய அணியில் தொடர்ச்சியாக நன்றாக ஆடும் வீரர் என்றால் அது சூர்யா குமார் யாதவ். எல்லா போட்டிகளிலும் கிட்டத்தட்ட 40 + ரன்களை எடுக்கிறார். அதோடு நல்ல ரன் ரேட்டில் அடிக்கிறார். நேற்று பிட்ச் ஆடுவதற்கு மிக கஷ்டமாக இருந்தது. ஆனாலும் அதில் இவரின் பேட்டிங் தனித்து தெரிந்தது. இதை பாராட்டி பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

சிறப்பான பவுலிங்
நேற்று புவனேஷ்வர் குமார் இடத்தை சாகர் நிரப்பி அவரை விட சிறப்பாக பவுலிங் செய்தார். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்த அவர் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். நேற்றைய போட்டியில் அர்ஷிதீப் சிங் சிறப்பாக ஸ்விங் செய்தார். அதேபோல் துல்லியமாக பவுன்சர்களை வீசினார். வெறும் 32 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை அவர் எடுத்தார். இதை வைத்து பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications