எல்லாம் போனை மூடிட்டு கிளம்புங்க.. ட்விட்டரில் வந்த அதிரடி மாற்றம்.. தெறிக்கும் மீம்ஸ்.. இதை பாருங்க
சென்னை: ட்விட்டர் பயன்பாட்டில் செய்யப்பட்ட அதிரடி மாற்றங்களை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம் போட்டு வருகின்றனர்.
எலான் மஸ்க் மூலம் ட்விட்டர் விதிகளில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இனி வெரிஃபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்வீட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் வெரிஃபை செய்யாத பயனர்கள் 1000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும். அதே சமயம் ட்விட்டரில் புதிதாக இணையும் புதிய யூசர்களுக்கு 500 ட்வீட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்த புதிய ட்விட்டர் கட்டுப்பாட்டை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதன்படி ட்விட்டர் நிறுவனம் கொடுப்பதே 1000 ட்வீட்ஸ்தான். தற்போது அதிலும் பாதிக்கு பாதி விளம்பரம் வந்துவிடுகிறது. என்ன கொடுமை இது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வந்த பின் டைட்டானிக் கப்பல் போல மூழ்குவதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். 48 பில்லியன் காசு கொடுத்து வாங்கி ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்கே கொன்றுவிட்டதாகவும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

இன்னும் பலர் நீங்கள் பார்க்கும் 1000 ட்வீட்களில் இதுவும் ஒரு ட்வீட்டாக இருப்பதில் சந்தோசம் என்றும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ.. அப்பிராணியோ! அபியூசர்ஸ்சோ! டிவிட்டர்லே இவ்வளவு நாளா ஒண்ணுமண்ணா கெடந்தோம்! கோவிலில் ஸ்பெஷல் டிக்கெட் போல ப்ளூடிக் இருந்தாலும் கடைசியா எல்லோரும் ஒரே சாமியைதான் பார்த்துட்டு இருந்தாங்க. இப்ப எலான் மஸ்க் ஒரே முடிவிலே ஒரு பெரிய வர்க்கப் பிரிவினையையே உண்டாக்கி இருக்கான். எல்லா testing ஐயும் நேரடியா client இடமே செய்து பார்க்கும் privilege இப்போதைக்கு இவனுக்கு மட்டும்தான் இருக்கு! எத்தனை நாளைன்னு இப்படியே போகுதுன்னு பார்ப்போம், என்றும் போஸ்ட் செய்துள்ளனர்.

ட்விட்டர் மாற்றங்கள்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதன் ஊழியர்கள் பலரை வேலையை விட்டு நீக்கினார். முக்கியமாக ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அக்ரவாலை பணியில் இருந்து நீக்கினார். அதை தொடர்ந்து பல இந்தியர்கள் உட்பட ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர் ட்விட்டர் நிறுவன பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பும் நீக்கப்பட்டது.
இந்த விவகாரங்களுக்கு இடையில் திடீரென ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக்கை நீக்குவதாக அறிவித்தது. அதன்படி ப்ளூ டிக் முறையின்றி வழங்கப்பட்டு உள்ளது. இதை நீக்க போகிறோம். மாறாக இனி ப்ளூ டிக் வைத்திருக்க காசு கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் ப்ளூ டிக் ஒரு மாதத்திற்கு 900 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பலரின் ப்ளூ டிக் மொத்தமாக காணாமல் போனது. பல செய்தி நிறுவனங்களின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டது. இதையடுத்துதான் தற்போது போஸ்டுகளை பார்ப்பதிலும் எலான் மஸ்க் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஏகப்பட்ட அளவிற்கு டேட்டாக்களை எடுப்பதை எலான் மஸ்க் விரும்பவில்லையாம். இப்படி டேட்டாக்களை எடுத்து அதை வேறு இடங்களில் பயன்படுத்துவார்கள்.
உதாரணமாக ஒரு ஏஐ உருவாக்குகிறார்கள் என்றால்.. அதில் புதிய தகவல்களை அப்டேட் செய்ய இது போன்ற ட்விட்டர் தகவலை பீட் செய்வார்கள். இதனால் ஏஐ உலகில் உடனுக்குடன் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும். அது முழு அப்டேட்டுடன் இருக்க முடியும். இதைத்தான் டேட்டா ஸ்கிராப்பிங் என்பார்கள். இந்த டேட்டா ஸ்கிராப்பிங்கை தடுப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications