என்னங்க இப்படி இறங்கிடீங்க! சென்னை மக்களே உங்க மகள்கள் வெள்ளத்தில் கஷ்டப்படக் கூடாதா? தெறி மீம்ஸ்!
திருச்சி: மிக் ஜாம் புயல் வந்ததும் வந்தது, ஒரேயடியாக சமூக வலைதளங்களில் அதை மையப்படுத்தியும், அது ஏற்படுத்திய தாக்கத்தை குறும்புடன் குறிப்பிட்டும் மீம்ஸ்கள் தெறிக்கவிடப்படுகின்றன.
சென்னை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 மற்றும் 4 ஆகிய இரண்டு தேதிகளில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. யாரும் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. இருளில் உணவின்றி, பாலின்றி பெரியோர் முதல் கைக்குழந்தைகள் வரை தவித்துப் போய்விட்டனர். சென்னை மக்களுக்கு சொல்ல முடியாத அளவுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்தச் சூழலில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் ஜாலி ஜமாலியன் என்ற பெயரில் நடத்தி வரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள மீம்ஸ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்றால், ''சென்னை மக்களே உங்க வீட்டு பெண்கள், இனிமேல் இது போல் மழை வெள்ளத்தால் கஷ்டப்படாமல் இருக்க திருச்சி மாவட்ட மாப்பிள்ளைகளுக்கு பெண் தாருங்கள். இங்கு லேசான மழை தான் பெய்யும். இப்படிக்கு திருச்சி மாவட்ட இளைஞர் சங்கம்.'' என்ற வரிகள் அந்த மீம்ஸில் இடம்பெற்றுள்ளன.
ஒரு காலத்தில் மாப்பிள்ளை சென்னையில் வேலை பார்க்கிறாராம் என விரும்பி பெண் கொடுத்த காலம் மலையேறிப் போய், இப்போது வெள்ளம் வராத ஊருக்கு பெண் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதை இவ்வாறு சிரிக்கும்படியும், சிந்திக்கும்படியும் அந்த மீம்ஸில் ஜாலி ஜமாலியன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மிக் ஜாம் புயலை மையமாக வைத்து இன்னும் பல கண்டண்ட்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து சென்னையில் கிரவுண்ட் ஃபுளோர் வீடுகளின் வாடகை கணிசமாக குறைந்துள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications