ஒவ்வொரு நிமிடமும் ஒரு புதிய தொடக்கம்.. புத்தம் புது ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

பிறக்கும் ஒவ்வொரு நிமிடமும் ரொம்ப பிரஷ்ஷானது.. புத்தம் புது ஆரம்பத்தின் பிறப்பு அது. ஒவ்வொரு தருணத்தையும் உற்சாகத்துடன் எதிர்கொள்ளுங்கள். அதைக் கொண்டாடுங்கள்.. முழுமையாக அதை ஆக்கப்பூர்வமாக மாற்றுங்கள், அனுபவித்து அதை பயன்படுத்துங்கள். ஒவ்வொரு நாளும் இனிமையான நாட்களாக மாறும்.

புத்தம் புது காலை பொன்னிற வேளை என்பார்கள். அது போல ஒவ்வொரு நாளின் துவக்கமும் புதிது தான். அந்தப் புதிய நாளை நாம் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு நொடியையும ரசித்து வாழ வேண்டும். வாரத்தின் தொடக்கத்தில் இருக்கும் புத்துணர்ச்சி தான் இந்த வாரம் முழுவதும் நம்மை ஓட வைக்கும் மருந்து.

வாழ்வின் ஒவ்வொரு நொடியும் புதிய தொடக்கத்தின் ஆரம்பமே. ஒவ்வொரு நாளையும் புது நாளாக நினைத்துக் கொண்டாடுங்கள். காலையில் இயற்கைக் காற்று முகத்தில் படர காப்பியை ருசிக்கும் அனுபவமே தனி.

சரியாக செய்யுங்கள்

சரியாக செய்யுங்கள்

இன்று என் கடமையைச் சரியாகச் செய்வேன் என்று மனதில் உறுதிமொழி எடுங்கள்.சிரித்த முகத்துடன் உங்கள் வீட்டையும் அலுவலகத்தையும் சுற்றி வாருங்கள். அப்போது பாருங்கள் உங்களுடைய மகிழ்ச்சி எத்தனைப் பேரை மகிழ்ச்சிப்படுத்துகிறது என்று. புதுப்புது விஷயங்களைப் பார்க்கும் போது நாம் நிறையக் கற்றுக் கொள்கிறோம். இந்தக் கொரோனா நம்மிடையே பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

நல்ல ஆரம்பம்

நல்ல ஆரம்பம்

பழங்காலப் பழக்கவழக்கங்களை மீட்டுக் கொண்டுள்ளது. எப்படி என்கிறீர்களா வீட்டிற்குள் நுழைந்ததும் கை கால்களை சுத்தம் செய்கிறோம். அதுவே ஒரு சிறந்த ஆரம்பம் அல்லவா. பீட்சா பர்கர் என்று சாப்பிட்டவர் எல்லாம் இன்று மிளகு ரசத்தை விரும்பிச் சுவைக்கின்றனர். அதுமட்டுமல்ல உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் சொந்தமாக தற்போது சிறியளவில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். அதுவே புது ஆரம்பம் தான்.

புதிதாக ஆரம்பிங்க

புதிதாக ஆரம்பிங்க

கார் ஓட்டுபவர் ஒருவர் தன் காரையே கடையாக மாற்றியுள்ளார். ஒரு துணை நடிகர் பழக்கடை ஆரம்பித்துள்ளார். அனைத்துமே புது ஆரம்பம் தானே. வாழ்க்கையில் சோர்ந்து விடாமல் ஒவ்வொரு நொடியும் அடுத்துப் புதிதாக என்ன செய்யலாம் என்று நினைப்பவனே வாழ்வில் உயர்கிறான். இன்று பலருக்கு வேலையிழப்பு ஏற்படுகிறது. அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் அவர்களுடையத் திறமைக்கேற்ப புதிய தொழிலைத் தொடங்கலாம். ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாக மாற்றுங்கள். புதிய பாதையில் வெற்றி நடை போடுங்கள்.

புதியன புகுதல்

புதியன புகுதல்

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது போல இரவு தூக்கத்தோடு அன்று நடந்த கசப்பான நினைவுகள் மற்றும் உங்கள் கவலைகளையும் மறந்து விடுங்கள். விடிகின்ற நாள் இனிய நாளாக அமையட்டும். புதிதாக ஒரு வேலையிலோ அல்லது தொழிலிலோ ஈடுபடும் போது எப்படி அதில் உயர்ந்த இலக்கினை அடையலாம் என திட்டமிடுங்கள். வாழ்க்கை என்பது ஒரு முறை தான். ஒவ்வொரு நொடியும புதுப்புது சாதகைளைப் படைக்கத் தயாராகுங்கள். ஒவ்வொரு நொடியும் ஓர் புதிய ஆரம்பம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக உங்கள் வாழ்வை அனுபவியுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+