தப்பு செஞ்சுட்டீங்களா.. மன்னிப்பு கேளுங்க.. தப்பே இல்லை!
ஒரு செயலை செய்கிறோம்.. அது தவறாகப் போய் விடுகிறது அல்லது நீங்கள் தப்பு செய்து விடுகிறீர்கள்.. என்ன செய்யலாம்.. தயங்காமல் வருத்தம் தெரிவித்து விடுங்கள். தேவைப்பட்டால் மன்னிப்பு கூட கேட்கலாம்.. தப்பே இல்லை..!
தப்பு செய்வது தவறில்லை ஆனால் தவறு என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தெரியாமல் செய்யும் தவறுக்கு நிச்சயம் மன்னிப்பு உண்டு. மன்னிப்பு கேட்பது தவறு ஒன்றுமில்லை. உங்களுடைய மன்னிப்பு உங்கள் எதிரே இருப்போரின் மனநிலையை மாற்றி அமைக்கும்.

தவறு செய்வது மனித இயல்பு அதைத் திருத்திக் கொள்வதில் தவறில்லை. தவறுக்கு மன்னிப்பு கோரும் போது உங்கள் மீது இருக்கும் மதிப்பு அதிகமாகும். அதனால் நற்பெயரும் கிடைக்கும். தவறு இழைப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பார்க்கும் போது நம் மனமும் கஷ்டப்படுகிறது. அதனால் நமக்கு அனுபவம் கிடைக்கிறது. நம்மால் ஏற்பட்ட தவறுக்கு நாம் தானே மன்னிப்பு கேட்க வேண்டும். சிலர் மன்னிப்பு கேட்பதில் கூட ஈகோ பார்க்கிறார்கள்.
தவறு செய்து விட்டால் மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். மன்னிப்பை தாமதிக்காது உடனே கேட்டு விடுங்கள். நீங்கள் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரும் போது உங்கள் மனமும் அமைதி பெறுகிறது. தவறு செய்யாதவர் இவ்வுலகில் எவரும் கிடையாது. கடவுளும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஒரு விஷயம் பிறர் கூறும் போது அதை சரிவர கவனிக்கவில்லை என்றால் தவறு ஏற்படும். ஒரு செயலைச் செய்யும் போது அதன் பொருளுணர்ந்து ஆராய்ந்து செய்ய வேண்டும். தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு உண்டு. தவறுக்காக மன்னிப்பு கோருங்கள் அதுவே உங்களை மேன்மேலும் உயர்த்தும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications