மனசை இதமாக்க இதைச் செய்யலாம்!
மனசெல்லாம் வெறுமையா இருக்கா.. போரடிக்குதா இல்லை கவலையா இருக்கா.. தூக்கித் தூர்ப் போடுங்க.. மனசைக் கொண்டாடுங்க எப்பவுமே..
அது எப்படிங்க மனசைக் கொண்டாட முடியும்னு கேட்கலாம்.. நிச்சயம் கொண்டாடலாம்ங்க.. அதுக்கா வழி இல்லை. .எத்தனை வழி இருக்கு தெரியுமா.. நாமதான் அந்த அற்புத அறைகளைத் திறந்து பார்ப்பதே இல்லையே.

மனசுக்குள்ள எதையும் அடைச்சு வைக்கக் கூடாது. அவ்வப்போது வெளியில் விட்டு விட வேண்டும். அப்போதுதான் புழுக்கம் நீங்கும்.. புஷ்பம் போல எப்போதும் பூரித்தபடி இருக்க வேண்டும் மனசு. அதுதான் அந்த மனசுக்குரிய கெளரவம் கூட.
மனசு மாதிரி ஒரு அருமையான விஷயம் மனிதர்களிடம் கிடையவே கிடையாது. அதை நேசிச்சாலே போதும்.. அது நம்மை ரட்சிக்கும்.. ரம்யமாக வச்சுக்கும். எல்லோருக்கும் சிறு வயது நினைவுகள் நிச்சயமா இருக்கும்.உங்களுடைய சின்ன வயசு போட்டோக்களை எடுத்துப் பாருங்க. அந்த போட்டோக்களைப் பார்க்கும் போது மனதில் ஏற்படும் சுகமே தனி தான்.
உங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேளுங்க முடிந்தால் நடனம் கூட ஆடலாம். உங்கள் பிள்ளைகளோடு கண்ணாமூச்சி விளையாடுங்கள். உங்களுக்குத் தெரிந்த பாரம்பரிய விளையாட்டுகளை உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கலாம். அன்னையின் மடியில் தலை சாய்த்து பத்து நிமிடம் படுத்துப் பாருங்கள். மனதில் இருக்கும் கவலையெல்லாம் போயே போச்சு என்பீர்கள்.அந்த சுகத்துக்கு ஈடு இணையே கிடையாது. எத்தனை வயதானாலும் தாயின் அன்பிற்கு ஈடே கிடையாது.

உங்கள் வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான தருணங்கள் உங்களுடைய வெற்றி உங்கள் திருமணம் குழந்தை வேலைக்குச் சென்ற முதல் நாள் இப்படி வாழ்வின் மறக்க முடியாத தருணங்களை மனதில் அசை போடுங்கள். அதன் சுகமே அலாதியானது தான். உங்களுடைய பள்ளி கல்லூரி நண்பர்களிடம் பேசுங்கள். தினமும் வீட்டில் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் மனதை ரிலாக்சா வைத்துக் கொள்ள உதவும். உங்களுக்குப் பிடித்த படங்களைப் பார்த்து மகிழுங்கள்.
டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி. உங்கள் மனசை சந்தோசமா வைத்துக்கொள்ள உங்களால் மட்டுமே முடியும். வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அதன் ஒவ்வொரு நொடியையும் என்ஜாய் பண்ணுங்க. மனசை ஹாப்பியா வச்சுக்கோங்க.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications