கடிகாரம் மாதிரி.. ஓடிட்டே இருங்க.. நிற்காதீங்க!
வாழ்க்கை என்பது கடிகாரம் மாதிரிதான். நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். கடிகாரம் எப்படி ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டுள்ளதோ அதுபோலத்தான் நாமும் நம் வாழ்க்கையுடன் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தால் தான் நம் வாழ்வின் இலக்கை அடைய முடியும். நம்முடைய வளர்ச்சிக்காக ஓடுவதில் தவறில்லை ஆனால் சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்துக் கொள்ளுங்கள். பிடித்த பாடலோ இசையோ கேளுங்கள். உங்கள் இலக்கை நோக்கிப் பயணியுங்கள். நம் வாழ்க்கையின் எதிர்காலத்திற்காக நாம் ஓடும் ஓட்டம் என்றும் குறையப் போவதே இல்லை.

உங்களுடைய இலக்குகளை அடைவதற்காக முயற்சி செய்யுங்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். ஓடாமல் நின்று விட்டால் நம் இலக்கை அடையவே முடியாது. ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீரரைப் போல நாமும் நம் வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி அடையும் வரை ஓட வேண்டும். எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு சிறப்பாகத் திட்டமிடல் வேண்டும். திட்டமிட்டுச் செயல்பட்டால் இலக்குகளை எளிதில் அடையலாம்.
கடிகாரத்தில் ஓடும் ஒவ்வொரு முள்ளும் நம் வாழ்வில் எடுத்து வைக்கும் ஒரு அடி ஆகும். வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்பட்டு வெற்றி வாகை சூடுங்கள். நம்மால் முடியாதது எதுவுமில்லை என்று நினைத்து எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிட்டு வேகமாக ஓடுங்கள். வேகமாக ஓடுங்கள் உங்கள் வாழ்வை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லுங்கள்.
எதையும் ரொம்ப லேசா எடுத்துக்கங்க பாஸ்.. வாழ்க்கை ஓட்டம் என்பதால் அப்படி ஸ்மூத்தாக இருக்க வேண்டும். கடிகாரத்தில் முட்கள் நகர்வதே தெரியாத அளவுக்கு ஓடும் பாருங்க.. அப்படி இருக்க வேண்டும் நமது வாழ்க்கையும்.. மறந்துடாதீங்க பாஸ்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications