அடுத்த பிறவியை விடுங்க.. இந்த வாழ்க்கையை அழகாக்குங்க!

Subscribe to Oneindia Tamil

ஏழு பிறவி இருக்கும் என்று சொல்வார்கள். அது உண்மையா பொய்யா என்று நமக்குத் தெரியாது. அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம் இது.. அதற்குள் நாம் போக வேண்டியதில்லை.

இப்ப மேட்டர் என்னன்னா.. வாழும் இந்த பிறப்பை அழகாக்கலாம்.. அது முழுக்க முழுக்க நம்ம கையில்தான் இருக்கு.. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் சிறப்பாக்கலாம், சீரிய முறையில் வாழலாம்.. அது நிச்சயம் நம்மால் முடியும்.. நம்மால் மட்டும்தான் முடியும்.

make this life beautiful

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப நீங்கள் என்னவாக வாழ விரும்புகிறீர்களோ அதை இந்த பிறவியிலேயே மகிழ்ச்சியாக வாழலாம். நீங்கள் நினைத்தால் நிச்சயம் முடியும். நம்முடைய சந்தோசம் நம் கையி்ல் தான் இருக்கிறது. உங்களுடைய இலக்குகளை அடைய முறையாகத் திட்டமிடுங்கள்.

திட்டமிடுவதோடு நில்லாமல் அதற்கான தொடர் முயற்சிகளில் ஈடுபடுங்கள். முயன்றால் மனிதனால் முடியாதது எதுவுமில்லை. நிச்சயமாக வாழ்வில் வெற்றி அடைவீர்கள். உங்கள் வாழ்வில் ஏற்படும் சின்ன சின்ன சந்தோசங்களையும் கொண்டாடுங்கள். முகத்தில் எப்பாழுதும் புன்னகை பூக்கட்டும்.

எப்பொழுதும் புத்துணர்ச்சியோடு இருங்கள். உங்களுக்கு அருகில் உங்களுக்குப் பாசிட்டிவ் எனர்ஜியாகப் பேசும் நபர்களை வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள். உங்கள் துணையிடம் மனம் விட்டுப் பேசுங்கள். வேலைகளைப் பகிர்ந்துச் செய்யுங்கள்.

புதுப்புது யோசனைகள் மனதில் பிறக்கட்டும். வாழ்வில் நீங்கள் நினைத்த இடத்தை நிச்சயம் அடைவீர்கள். இதற்காக அடுத்தப் பிறவி வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களால் முடியும் என்று நம்புங்கள். பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசுங்கள். உறவினர்களை வருடம் ஒருமுறையாவது பிள்ளைகளோடு சென்று பார்த்து வாருங்கள்.

கிடைத்தற்கரிய மானிடப் பிறவி நமக்குக் கிட்டியுள்ளது. அடுத்த பிறவி எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியாது. அதனால் இப்பிறவியிலேயே நீங்கள் வாழும் வாழ்க்கையை அழகாக மாற்ற உங்களால் மட்டுமே முடியும். அடுத்தப் பிறவி எதற்கு இந்த பிறவியிலேயே அழகாக வாழலாம் வாங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+