பாராட்டுங்கள்.. தட்டிக் கொடுங்கள்.. நேசம் பெருகட்டும்
அன்பு எங்கு ஊற்றெடுக்கும் தெரியுமா.. பரிவும், தட்டிக் கொடுத்தலும், பாராட்டும் இருக்கும் இடத்தில்தான் அன்பும், நேசமும் பெருக்கெடுக்கும்.. வெறுப்பை சம்பாதிப்பது எளிது.. அன்பை சேகரிப்பது கஷ்டம்.. ஆனால் இஷ்டப்பட்டு செய்யும் எந்தக் காரியமும் அன்பின் பிறப்பிடமாக உருவெடுக்கும்.
நாம் செய்யும் செயலை ஒருவர் பாராட்டினால் நம் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியே தனி தான். சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாராட்ட வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர். ஒருவரின் செயலைப் பாராட்ட பரிசுப்பொருளோ உயர்பதவிகளோ தேவையில்லை. அன்பாகத் தட்டிக் கொடுங்கள் அதுவே போதுமானது. இரண்டு வயது குழந்தை ஒரு படம் வரைந்தால் உடனே அக்குழந்தையைப் பாராட்டுங்கள்.

ஒருவரைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தால் தாமதிக்காமல் பாராட்டுங்கள். அதுவெறும் வார்த்தைகள் அல்ல. அந்தப் பாராட்டுகள் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும். மேன்மேலும் பாராட்டுக்கள் வாங்க மனது துடிக்கும். அதனால் தங்கள் செயல்களில் வெற்றிப் பெற பெரும்பாடு படுவார்கள். அன்பு என்ற ஒன்று தான் அனைவரும் எதிர்ப்பார்ப்பது. சின்ன முயற்சியாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அம்முயற்சியைப் பாராட்டுங்கள்.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப அன்பு ஒன்றே மனிதனிடத்தில் ஆர்வம் உண்டாக்கும். அதனால் முடிந்தவரை மற்றவரைப் பாராட்டுங்கள். மற்றவர்கள் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது பாராட்டு மட்டுமே. மனைவி காலையில் காபி கொண்டு வந்து கொடுத்தால் அவரைப் பாராட்டுங்கள் வகுப்பில் மாணவர் நற்கருத்துகளைக் கூறினால் அவர்களைப் பாராட்டுங்கள்.
அனைவரின் மனமும் வேண்டுவது பாராட்டு ஒன்றே. உங்களின் பாராட்டு அவர்களின் வளர்ச்சிக்கு வித்திடும். இருவருக்குமிடையேயான அன்பு பலப்படும். மனதாரப் பாராட்டுங்கள் உங்களோடு இருப்பவர்களை. அன்புடையவர் எல்லாம் உடையவர் அன்பில்லாதவர் மரத்திற்கு ஒப்பாவர் என்று வள்ளுவப் பெருந்தகைக் கூறியுள்ளார்.
Recommended Video
உங்கள் குழந்தைகளின் முயற்சிகளைப் பாராட்டுங்கள். அன்பு பலப்பட வேண்டுமென்றால் பாராட்டு அவசியம். திகட்ட திகட்டப் பாராட்டுங்கள் அன்பென்ற மழையில் நனைந்திருங்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications