சும்மா பேசிட்டே இருக்காதீங்க.. செய்து காட்டுங்க!
நிறையப் பேர் நிறைய பேசுவார்கள்.. பேசிக் கொண்டே இருப்பார்கள். காரியம் மட்டும் நடக்காது. வாய்ச் சொல் வீரர்களாக இருப்பார்கள்.. ஆனால் அப்படி இருப்பதால் ஒரு பயனும் கிடையாது. மாறாக சொல்லக் கூடாது.. செய்து காட்ட வேண்டும். அதுதான் உண்மையான திறமை.
என்கிட்ட இந்த வேலையைக் கொடுத்திருந்தால் நான் இதை இன்னும் சிறப்பாக செய்வேன் என்று கூறும் சிலரிடம் அந்த வேலையைக் கொடுத்தால் அவர்களுக்கு உண்மையில் அதை சரிவர செய்ய தெரியாது.

ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவனுக்கு ரமேஷ் தினேஷ் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இருவரும் நன்றாகப் படித்தனர். படித்து முடித்து விட்டு இருவரும் தந்தையின் வயலில் வேலை செய்தனர்.
அவ்வாறு வேலை செய்யும் போது இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. அதனால் ரமேஷ் தன் தந்தையிடம் மொத்த நிலத்தையும் தன் பேருக்கு எழுதித் தருமாறு கேட்டான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் சிறிது நேர யோசனைக்குப் பின் தன் முடிவைத் தெரிவித்தார்.
இருவருக்கும் தன் நிலத்தை சமபங்காகப் பிரித்து கொடுத்தார். இருவரும் ஆறு மாதம் விவசாயம் செய்ய வேண்டும். யார் அதிகம் அறுவடை செய்கிறார்களோ அவருக்கே முழு நிலமும் சொந்தம் என்றார். அவருடைய கோரிக்கையை இருவரும் ஏற்றனர். ரமேஷ் தான் தினேஷை விட அதிக மகசூல் செய்வேன் பாருங்கள் என்று கூறிச் சென்றான்.
ரமேஷ் தனக்கு கொடுத்த நிலத்தை குத்தகைக்கு விட்டு விட்டு ஜாலியாக பொழுதைக் கழித்தான். ஆனால் தினேஷோ காலத்திற்கேற்றவாறு பயிர்களை விதைத்துப் பயிர் செய்திருந்தான். நான் நிச்சயமாக தினேஷை விட அதிக விளைச்சல் காட்டுவேன் என்று அடிக்கடி தன் தந்தையிடம் கூறினான்.ஆறு மாதங்கள் கடந்தன.விவசாயி வந்து இருவருடைய விளைச்சலையும் பார்வையிட்டார். ரமேஷின் நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தனர். அதற்கு சரிவர தண்ணீர் பாய்ச்சாத காரணத்தால் பயிர்கள் வாடி இருந்தன.
தினேஷ் தனக்குக் கொடுத்த இடத்தில் காய்கறிகள் பயிரிட்டு இருந்தான். அவனுடைய உழைப்பின் விளைவாக அதிக விளைச்சல் கிடைத்தது. இதைக் கண்ட விவசாயி தன் இரண்டாவது மகன் தினேஷிற்கு தன் நிலத்தை எழுதி கொடுத்தார். அவன் உழைப்பையும் பாராட்டினார். ரமேஷ் தினேஷிற்கு உதவியாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.
வெறும் வாய்ச்சொல் வீரராக இருந்தால் மட்டும் போதாது செயலிலும் நம் திறமையை நிரூபிக்க வேண்டும். அப்போது தான் நாம் வெற்றியை அடைய முடியும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications