Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாதுகாப்பு மற்றும் விமானத்துறையில் MSME -க்களின் பங்கு? தமிழகத்தில் இருக்கும் சலுகைகள்?

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் விமானத்துறையில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) பங்களிப்பானது மிக முக்கியமானது, தவிர்க்க முடியாத ஒன்றும் கூட. ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் முன்னணி நிறுவனங்களாக வலம் வந்து கொண்டிருக்கும் பெரிய பெரிய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தேவையான, துல்லியமான, தரமான உதிரி பாகங்கள், கருவிகள், மின்சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை எம்.எஸ்.எம்.இ -க்களே தயாரிக்கின்றன. இவை பெரும்பாலும் பெரிய நிறுவனங்களின் விநியோகச் சங்கிலியில், டயர் 2 மற்றும் டயர் 3 சப்ளையர்களாக பணியாற்றுகின்றன.

MSME

எம்.எஸ்.எம்.இ -க்கள் ஏன் பெஸ்ட்?

எம்.எஸ்.எம்.இ-க்கள் அளவில் மிகச்சிறியவையாக இருப்பதால், புதிய தொழில் நுட்பங்களைக் விரைவில் ஏற்றுக் கொள்கின்றன. மேலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படுகின்றன. இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் நம்பகத்தன்மையும் மிக அதிகம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தவிர்த்து, அதற்கு பதிலாக உள்நாட்டிலேயே சிறந்த தரத்தில் உதிரி பாகங்கள் தயாரிப்பதன் மூலம், மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பார் பாரத் திட்டங்களுக்கு எம்.எஸ்.எம்.இ-க்கள் முதுகெலும்பாக திகழ்கின்றன.

தமிழகத்தின் பங்கு எப்படி?

தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள தமிழ்நாடு டிஃபென்ஸ் கோரிடார் (TDC), தமிழக எம்.எஸ்.எம்.இ -களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது. சென்னை, ஓசூர், சேலம், கோவை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய ஐந்து மையங்களை உள்ளடக்கிய இந்த டிடிசி -ல் வலுவான எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் உள்ளன.

கோயம்புத்தூர் ஃபவுண்டரி, மோட்டார் பம்புகள், ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிப்பில் வலுவான அடித்தளத்தை கொண்டுள்ளது. இந்த திறன்களைப் பாதுகாப்பு துறையிலும் பயன்படுத்த முடியும். அதே போன்று திருச்சி பேப்ரிகேஷன் மற்றும் இயந்திர வேலைகளில் சிறப்புத் திறன் கொண்டது. ஓசூர் வாகன உதிரி பாகங்கள், வாகனங்கள் உற்பத்தியில் பேர் போன நகரமாகும். இது பாதுகாப்பு மற்றும் விமான துறைக்கு தேவையானவற்றை உற்பத்தி செய்வதில் உதவி புரிய வாய்ப்புகள் அதிகம். மொத்தத்தில் மேற்கண்ட ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கிடையில் எம்.எஸ்.எம்.இ -களுக்கு உதவி புரியும் விதமாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) போன்ற நிறுவனங்கள், பாதுகாப்பு துறையின் தேவையை பூர்த்தி செய்ய நிதி மற்றும் வழிகாட்டுதல் ஆதரவையும் வழங்குகின்றன. மொத்தத்தில் பாதுகாப்பு மற்றும் விமானத் துறையின் விநியோக சங்கிலியை வலிமைப்படுத்துவதிலும், தொழில்நுட்ப ரீதியாக தன்னிறைவு அடைவதிலும் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

மேற்கொண்டு பாதுகாப்பு மற்றும் விமானத் துறையில் செயல்படும் எம்.எஸ்.எம்.இ-களுக்கு மத்திய மாநில அரசுகள், பிரத்யேகமான மானியங்கள் மற்றும் பயிற்சி திட்டங்கள் என பலவும் உள்ளன. குறிப்பாக தமிழக அரசு தனது விமான மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை 2019-ன் மூலம், இந்த பிரிவில் முதலீடு செய்யும் சிறு நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது.

தமிழக அரசின் மானியங்கள்!

பாதுகாப்பு மற்றும் விமானத்துறை சார்ந்த சிறு நிறுவனங்களின் ஆலை மற்றும் உபகரணங்களின் முதலீட்டு செலவில் 10% வரையில் மானியம் வழங்கப்படுகிறது. இது 10 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்யும் புதிய நிறுவனங்களுக்கு பொருந்தும். மேலே குறிப்பிட்டுள்ள மானியத்தில் தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக 50% மானியம் வழங்கப்படும். இது தென் மாவட்டங்களில் அமைக்கப்படும் எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு மட்டுமே பொருந்தும்.

எம்.எஸ்.எம்.இ-க்கள் சர்வதேச தர சான்றிதழ்கள் பெறுவதற்கான செலவில் 50% வரை மானியம் வழங்கப்படுகிறது. இது பாதுகாப்பு மற்றும் விமானத்துறை சார்ந்த சிறு நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். திறன் மேம்பாட்டு மானியமாக, பயிற்சி பெறுவோருக்கான செலவாக, ஒரு பயிற்சியாளருக்கு மாதம் 10,000 ரூபாய் வரையில் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு நிறுவனத்தில் இருந்து அதிகபட்சம் 50 பயிற்சியாளர்கள் வரையில் பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

நில ஒதுக்கீட்டிலும் சலுகைகள் உண்டு. டிட்கோ (TIDCO) மற்றும் சிப்காட் (SIPCOT)-ன் சிறப்பு பூங்காக்களில் நிலம் ஒதுக்கப்படும்போது பாதுகாப்பு மற்றும் விமானத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு 20% சலுகை வழங்கப்படுகிறது. பெரிய அளவிலான அல்லது முன்னோடி எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, முதல் 10 முதலீட்டாளர்களுக்கு ஆங்கர் யூனிட் மானியமாக, அவர்கள் முதலீடு செய்யும் நிலையான சொத்துக்கள் மதிப்பில் 10% மானியம் வழங்கப்படும்.

கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சி மையங்கள்!

பாதுகாப்பு துறையின் பிரத்யேக தேவைகளைப் பூர்த்தி செய்ய, தமிழகத்தில் சில முக்கிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூரில் உள்ள கோடீசியா டிஃபென்ஸ் இன்னோவேஷன் அண்ட் அடல் இன்குபேஷன் சென்டர் (CDIIC) மையமானது பாதுகாப்பு துறை சார்ந்த ஸ்டார்ட் அப்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ-க்களின் யோசனைகளை தொழில் ரீதியாக மேம்படுத்த, வழிகாட்டுதல், நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உள்கட்டமைப்பு வசதிகள் என பலவற்றையும் செய்து கொடுக்கிறது.

திறன் மையங்கள் (CoE): டிட்கோ, ஜிஇ ஏரோஸ்பேஸ், சீமென்ஸ் மற்றும் டசால்ட் சிஸ்டம்ஸ் போன்ற உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து, இண்டஸ்ட்ரி 4.0 (Industry 4.0) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எம் எஸ் எம் இ-க்கள் ராணுவ பயன்பாட்டுக்கான புதிய வடிவமைப்பு மற்றும் முன்மாதிரி உருவாக்கத்திற்கு உதவும் திறன் மையங்களை அமைத்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்கள்

இன்னோவேஷன்ஸ் ஃபார் டிஃபென்ஸ் எக்ஸலன்ஸ் (iDEX): பாதுகாப்பு மற்றும் விமான துறையின் வளர்ச்சிக்காக, எம்.எஸ்.எம்.இ-க்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) நிதி மற்றும் மானியங்கள் (10 கோடி ரூபாய் வரை) வழங்குகிறது.

தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (TDF): பாதுகாப்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான எம்.எஸ்.எம்.இ -க்களுக்கு ₹10 கோடி வரை நிதி உதவி வழங்குகிறது.

தொழில்நுட்ப நவீனமயமாக்கல் மானியம் (CLCS-TUS): புதிய மற்றும் நவீன இயந்திரங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்த எம்.எஸ்.எம்.இ -க்கள் பெறும் வங்கிக் கடன்களில் 15% வரை மூலதன மானியம் வழங்கப்படுகிறது. மேற்கண்ட இந்த மூன்று மத்திய அரசின் திட்டங்களும், தமிழக எம்.எஸ்.எம்.இ-க்களுக்கும் பொருந்தும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+