Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரிபுரா மதக் கலவரம் பற்றி செய்தி வெளியிட்டதால் கைது! 2 பெண் பத்திரிக்கையாளர்களுக்கும் கோர்ட் ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

அகர்த்தலா: திரிபுராவில் நடைபெற்ற மதக் கலவரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டதற்காக அம்மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் பத்திரிகையாளர்களுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

வங்கதேசத்தில் தசரா பண்டிகையின்போது இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து திரிபுராவில் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரம் வெடித்துள்ளது. அங்கே மசூதிகள் சேதப்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில்தான், திரிபுரா மாநிலத்தின், கோமதி மாவட்டத்தில் ஒரு மசூதி எரிக்கப்பட்டதாகவும், குர்ஆன் சேதப்படுத்தப்பட்டதாகவும், சம்ருத்தி சகுனியா மற்றும் ஸவர்ணா ஜா ஆகிய, 2 பெண் பத்திரிகையாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்

நீதிமன்றத்தில் ஆஜர்

இதையடுத்து, சம்ருத்தி சகுனியா மற்றும் ஸ்வர்ணா ஜா ​​ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுக்க இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோமதி மாவட்டத்தின் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சுப்ரா நாத் முன்னிலையில் அவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஜாமீன் வழங்கிய நீதிபதி

ஜாமீன் வழங்கிய நீதிபதி

விசாரணை நடத்திய நீதிபதி, ரூ. 7,500 பிணைத் தொகையின் பேரில் இருவருக்கும் ஜாமீன் வழங்கினார். ஜாமீன் கோரி தனது வாதங்களை முன்வைத்த பத்திரிக்கையாளர்களின் வழக்கறிஞர் பிஜூஷ் பிஸ்வாஸ், இருவரும் மதவாத வெறுப்பை பரப்பியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார். பத்திரிகையாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. பொலீசார் தவறான நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ளனர், என்று அவர் தெரிவித்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இரு பத்திரிக்கையாளர்களும் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளார்கள் என்றும் என்று பிஸ்வாஸ் கூறினார்.

எப்ஐஆர்

எப்ஐஆர்

ஞாயிற்றுக்கிழமை ஃபாடிக்ராய் காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் இருவர் மீதும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது, அவர்கள் தங்கள் பதிவுகள் மூலம் திரிபுரா அரசின் நன்மதிப்பை கெடுக்க முயன்றனர் என்று விஎச்பி ஆதரவாளர் ஒருவர் போலீசில் அளித்த புகாரையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அசாம் போலீஸ் தடுத்து நிறுத்தியது

அசாம் போலீஸ் தடுத்து நிறுத்தியது

திரிபுரா காவல்துறையின் வேண்டுகோளின் பேரில், இரு பத்திரிக்கையாளர்களும் சில்சார் விமான நிலையத்திற்குச் சென்றபோது, ​​அசாம் போலீசாரால் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டனர். அரசால் நடத்தப்படும் பெண்களுக்கான காப்பகத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை திங்கள்கிழமை காலை திரிபுரா போலீசார் கைது செய்து கோமதி மாவட்டத்தில் உள்ள சிஜேஎம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 டிஜிபி விளக்கம்

டிஜிபி விளக்கம்

திரிபுரா காவல்துறை டிஜிபி யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சகுனியாவின் பதிவுகள் உண்மையல்ல என்றும், சமூகங்களுக்கு இடையே வெறுப்பு உணர்வை ஊக்குவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. அவர் தனது சமூக ஊடகப் பதிவில், 11/11/2021 அன்று, ஹுரிஜாலா, பிஎஸ் கக்ரபானைச் சேர்ந்த ரஹமத் அலி என்பவரின் வீட்டில், புனித குர்ஆன் எரிக்கப்பட்டதாக கூறி வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் 19/10/2021 அன்று இரவு நடந்தது. கக்ராபன் காவல் நிலைய எல்லையில் நடந்த சம்பவம். அதுபற்றி அப்போதே (PS வழக்கு எண். 74/2021 U/S 436 IPC) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு டிஜிபி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+