ஆர்.எஸ்.எஸ். விவகாரம்: சோனியா தலைமையில் பேரணி
Subscribe to Oneindia Tamil
புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேரலாம் என்று குஜராத் அரசு அறிவித்திருந்தது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் மார்ச் 6 ந் தேதி பேரணி நிடத்தப் போவதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுபாஷ் சோப்ரா நருபர்களிடம் கூறுகையில், அர சு நர்வாகத்தை பாரதிய ஜனதாக் கட்சியினர் இந்துத்துவம் என்ற போர்வைக்குள் நுழைந்து காவி நறமாக்க யல்கிறார்கள்.
இதைக் காங்கிரஸ் கட்சியினர் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இதைக் கண்டிக்கும் வகையில் மார்ச் 6 ம் தேதி பேரணி நிடத்தவுள்ளோம். இப்பேரணி டெல்லியில் ராம்லீலா மைதானத்திலிருந்து தொடங்கும்.
பாரதிய ஜனதாக் கட்சியினருக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் நிாங்கள் நிடத்தும் பேரணி இருக்கும் என்றும் அவர் தெவித்தார்.












Click it and Unblock the Notifications