வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஹஜ் புனித யாத்திரையில் 1.1 லட்சம் இந்தியர்கள்
மெக்கா:
இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு 1.1 லட்சம் பேர் ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.
இந்திய ஹஜ் நில்லெண்ணக் குழுத் தலைவரும் மத்திய உணவுப் பதப்படுத்துதல்துறை இணை அமைச்சருமான சையத் ஷாநிவாஸ் வியாழக்கிழமை மெக்காவில் உள்ள இந்திய ஹஜ் மையங்களைப் பார்வையிட்டார்.
இடவசதி தொடர்பாக சில யாத்திரையாளர்கள் கூறிய குறைகளை உடனே களையுமாறும் உத்தரவிட்டார்.
இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவிலிருந்து தான் அதிக எண்ணிக்கையிலான ஸ்லீம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இந்தோனேசியாவிலிருந்து 1.85 லட்சம் புனிதப் பயணிகள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய அரசு இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை செய்யும் புனிதப் பயணிகளின் எண்ணிக்கையை 95.000லிருந்து 1.2 லட்சமாக உயர்த்தியுள்ளது.
இந் நலையில் மெக்கா வந்த இந்தியப் பயணிகளில் 44 பேர் இறந்துள்ளனர். துமை போன்ற இயற்கையான காரணங்ளால் இவர்கள் மரணித்துள்ளனர். ஒரு பெண் பயணி காபாவில் நிடந்த வழிபாட்டு நகழ்ச்சியில் ஏற்பட்ட நிெருக்குதலில் சிக்கியும் மற்றொருவர் சாலை விபத்திலும் இறந்தனர்.
சிலர் செளதி மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய ஹஜ் பயணிக்கு சிகிச்சையளிக்க என 100 பேர் கொண்ட மருத்துவக் குழு செயல்பட்டு வருகிறது. 24 மணி நிேரம் இக் குழு இயங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications