வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில்இந்தியாவிலிருந்து தப்பிய காஷ்மீர் தீவிரவாதி
இஸ்லாமாபாத்:
இந்திய போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்த காஷ்மீர் தீவிரவாதிகளின் தலைவன் குலாம் ரசூல் ஷா இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்திருக்கிறார்.
ஜமாத்-யுல்-ஜாகிதீன் என்ற பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதப் படையின் தலைவனான இவருக்கு ஜெனரல் அபதுல்லா என்றும் பெயர் உண்டு. ஒரு மாதத்துக்கு ன் காஷ்மீல் மருத்துவமனைக்கு அழைத்தச் செல்லும் வழியில் இவர் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பினார்.
இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீன் தலைநிகரான ஸாபராபாத்தில் இவர் நுழைந்திருக்கிறார்.
இது குறித்து அந்த தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1997ம் ஆண்டு குலாம் ரகசிய இடத்திலிருந்து இந்தியப் படைகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். இப்போது அவர் ஸாபராபாத்தில் உள்ளார் எனக் கூறியுள்ளது.
காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என இந்த அமைப்பு கோ வருகிறது.












Click it and Unblock the Notifications