வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

நூற்றுக்கணக்கான சிறுவர்களைக் கொன்ற 2 பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை: உடல்கள் வெட்டப்பட்டு அமிலத்தில் கரைக்கப்படும்

இஸ்லாமாபாத்:நூற்றுக்கணக்கான சிறுவர்களைக் கொன்று, அவர்களது உடல்களை வெட்டி, அமிலத்தில் ழ்கடித்ததாக கைதான இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், கொல்லப்பட்ட சிறுவர்களைப் போலவே, இவர்களது உடலும் வெட்டப்பட்டு, அமிலத்தில் ழ்க வைக்கப்பட வேண்டும் என்றும் அந்த நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

லாகூர் நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜாவேத் இக்பால் என்பவர், நூற்றுக்கணக்கான சிறுவர்களைக் கடத்திச் சென்று, அவர்களைக் கொன்று, உடல்களை துண்டு துண்டாக வெட்டி அமிலத்தில் ழ்கடித்தது சமீபத்தில் தெய வந்தது. பெய அமிலத் தொட்டிகளையும் போலீஸார் கைப்பற்றினர். இதையடுத்து தீவிர வேட்டை நிடத்தி இக்பால் கைது செய்யப்பட்டார்.

இக்பால் மீது லாகூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சாஜித் அகமது என்பவரும் கைது செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

நீதிபதி அல்லா பக்ஷ் ரஞ்சா இஸ்லாமிய சட்டப்படி தீர்ப்பு அளித்துள்ளார். அவரது தீர்ப்பு விவரம்:

அப்பாவிச் சிறுவர்களைக் கொன்ற நீங்கள் இருவரும் கொல்லப்படுவதற்குத் தகுதி படைத்தவர்கள்.

எனவே, நீங்கள் கொன்ற சிறுவர்களின் பெற்றோர் ன்னிலையில் இருவரும் தூக்கில் போடப்படுவீர்கள். அதன் பிறகு உங்களது உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்படும். பின்னர் அவை அமிலம் நரப்பப்பட்ட தொட்டிகளில் போட்டுக் கரைக்கப்பட்டு விடும் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

தனது குற்றத்தை தலில் ஒப்புக் கொண்ட இக்பால், பின்னர் மறுத்தார். ஆனால் அவரது வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. மரண தண்டனையை எதிர்த்து மேல் றையீடு செய்யப் போவதாக இக்பாலின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

அரசுத் தரப்பில் இந்த வழக்கில் 105 சாட்சிகள் ஆஜர்செய்யப்பட்டனர். இவர்களில் கொல்லப்பட்ட 75 சிறுவர்களின் குடும்பத்தினரும் அடங்குவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+