தங்கம் வென்ற தங்கங்கள்

Subscribe to Oneindia Tamil

சட்டப்பேரவையில் விவாதத்துக்கு வந்த ஆடு-புலி கதை

சென்னை:

பிரபலமான ஆடு-புலி ஆட்டக் கதை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை சுவாரசியமான விவாதம் நடைபெற்றது.

அதன் விவரம்:

மணி (திமுக): ஒரு மிருகக் காட்சி சாலைக்கு ஒருவன் போனான். அங்கே ஒரு கூண்டுக்குள் புலியும், ஆடும் ஒன்றாக அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்து அவன் வியந்து போனான. மறுநாளும் வந்தான். அதே காட்சியைக் கண்டான். ஆச்சரியப்பட்ட அவன், இது எப்படி முடியும் என்று மிருகக்காட்சிச் சாலை அதிகாரிகளிடம் விசாரித்தான். அப்போதுதான் அவனுக்கு ஒரு உண்மை தெரியவந்தது.

நேற்று நீங்கள் பார்த்தது வேறொரு ஆடு. இன்று நீங்கள் பார்ப்பது புது ஆடு. தினமும் புலிக்கு ஒரு ஆடு உணவாக அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல்தான் அதிமுக-தமாகா உறவும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

சி. ஞானசேகரன் (தமாகா): நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால், பாரதீய ஜனதா கட்சி புலியாக இருந்து, நீங்கள் ஆடாக மாறிவிடக்கூடாது என்பதுதான்.

மோகன் கந்தசாமி (தமாகா): எங்களைப் பார்த்து ஆடு என்று மணி சொன்னார். ரிங் மாஸ்டர் சரியாக இருந்தால் ஆடு கூட புலிமேல் ஏறி சவாரி செய்ய முடியும்.

முதல்வர்: இதை ஞானசேகரனுக்குத் தரப்பட்ட பதிலாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+