வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வெற்றிப் பாதையில் மீண்டும் பவனி வருவோம் - இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி நம்பிக்கை
மும்பை:
கிரிக்கெட் உலகில் இந்தியா மீண்டும் வெற்றி உலா வரும் இந்திய அணி கேப்டன் சவுரங் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.
ஷார்ஜாவில் நடைபெற்று வரும் கோக-கோலா கோப்பைக்கான ஒரு கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா தோல்வியடைந்தது. இதையடுத்து, ராகுல் திராவிட், வெங்கடேஷ் பிரசாத், அனில் கும்ளே, ஸ்ரீநாத், சபா கரீம் ஆகியோருடன் சவுரவ் கங்குலி மும்பை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
ஷார்ஜா போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்ததே தோல்விக்கு முக்கிய காரணமாகும். நான் உள்பட அணியின் முக்கிய வீரர்கள் பேட்டிங்கில் தங்களது திறமையை வெளிக்காட்டவில்லை.
கேப்டன் பொறுப்பேற்றதால் எனது பேட்டிங் திறமை குறைந்துவிடவில்லை. அப்படி நானும் நினைக்கவில்லை. சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் போன்றவர்கள் நன்றாக விளையாடவில்லை. எல்லா போட்டிகளிலும் எல்லா வீரர்களும் ரன் குவிக்கவேண்டும் என்பதை எதிர்பார்க்கக்கூடாது. ராகுல் திராவிட் சிறந்த வீரர். இப்போது அவர் ரன்கள் குவிக்கவில்லை என்றாலும், அடுத்து வரும் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் சேர்ந்த அசாருதீன் நன்றாக விளையாடினார். ஆனால், அவரிடமிருந்து 30, 40 ரன்களை அணி எதிர்பார்க்கவில்லை. அவருக்குள்ள அனுபவத்துக்கும், திறமைக்கும் செஞ்சுரிகளை அடிக்கவேண்டும். அவரிடமிருந்து அணியும், இந்திய நாடும் அதிகம் எதிர்பார்க்கிறது.
அணியின் பேட்டிங் மோசமாக இருந்ததாலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். கடைசி 10 ஓவர்களில் மிகக் குறைந்த ரன்களே விட்டுக் கொடுத்தனர். பிரசாத், அகார்கர், கும்ளே சிறப்பாகப் பந்து வீசினர். ஸ்ரீநாத் எதிர்பார்த்த அளவுக்குப் பந்து வீசவில்லை.
இந்திய அணியின் திறமை குறைந்து விடவில்லை. எதிர்காலத்தில் இந்திய அணி நிறைய போட்டிகளில் விளையாட உள்ளது. கடுமையாக உழைத்து மீண்டும் பழைய பலத்துடன் இந்திய அணி விளையாடி வெற்றி பெறும் என்றார் கங்குலி.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications