தமிழகத்தில் இன்று
வடமாநில வறட்சிக்கு உதவும் வெளிநாட்டு இந்தியர்களுக்கு மத்திய அரசுபாராட்டு - அத்வானி
அகமதாபாத்:
வட மாநிலங்களில் நிலவும் கடும் வறட்சிக்கு நிவாரண உதவிகள் செய்யும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசின் சார்பில் பாராட்டுசெய்யப்படும் என்று மத்திய அமைச்சர் எல்.கே. அத்வானி தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பதான், சுரேந்திர நகர் மாவட்டங்களை அத்வானியும், மத்திய வேளாண்துறைஅமைச்சர் சுந்தர் லால் பாட்வாவும் செவ்வாய்க்கிழமை சுற்றுப் பார்த்தனர்.
வறட்சி குறித்த முதல் கட்ட தகவல்களைத் திரட்டிய பிறகு நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:
குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய, மாநிலஅரசுகள் நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றன.
மாநிலங்களில் கடும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வெளியிலிருந்து உதவி கோரப்பட்டுள்ளது. அவ்வாறு,வறட்சி நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்கும் வெளிநாட்டு இந்தியர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்படும்.
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் பலர், உதவி செய்ய விரும்பம் தெரிவித்துள்ளனர். சட்டரீதியாக சில பிரச்சினைகள் உள்ளதால் இதுவரை அவர்களதுஉதவி கிடைக்கவில்லை. அவர்களது நிதியுதவியைப் பெற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வறட்சிப் பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு மாநில அரசு அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர்கள் இருவரும் பேச்சு நடத்தினர். அடுத்து வரவுள்ள பருவமழைபொய்த்துவிட்டால், வறட்சி நிலைமை மேலும் மோசமடையும் என்று அமைச்சர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லி திரும்பியதும், வறட்சி நிலைமை குறித்த அறிக்கையை பிரதமர் வாஜ்பாயிடம் அமைச்சர்கள் வழங்குவார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications