For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறைவாசத்தால் பக்தி மானாக மாறிய லல்லு

By Staff
Google Oneindia Tamil News

சிறைவாசத்தால் பக்தி மானாக மாறிய லல்லு

பாட்னா:

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்று ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் லல்லுபிரசாத் யாதவ் ஜெயிலில் பக்திப்புத்தகங்கள் படித்து வருகிறார். முழுமையான பக்தி மானாக அவர் மாறி விட்டார்.

பையூர் ஜெயிலின் உள்ளேயிருக்கும் புத்தர் சிலை முன்பு அவர் அமர்ந்து கொண்டு தியானம் செய்தும், வன்முறைக்கு எதிரான புத்தகங்களைப் படித்தும் வருகிறார்.

Lalu Prasad

ராஷ்டிரிய ஜனதாக் கட்சித் தலைவரும், பிகார் முன்னாள் முதலமைச்சருமான லல்லுபிரசாத் யாதவ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து ஊழல்வழக்கில் சம்பந்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது ஜெயிலில் ஹனுமான் சலிசா, மற்றும் துர்கா சப்ஸ்த்தி ஆகியப் புத்தகங்களைப் படித்து வருகிறார். காலை 6.30 மணிக்கு எழும் அவர் குளித்துவிட்டு தியானத்திலும், பூஜை செய்வதிலும் ஈடுபடுகிறார். பக்தி சன்மார்க்க நெறிகளைப் பரப்பும் புத்தகங்களைப் படிக்கிறார். பிற்பகல் உணவிற்கு முன் அவர்தன்னைப் பார்க்க வந்தவர்களைச் சந்திக்கிறார்.

ஒரு மனிதன் பக்தி பரவசத்தில் ஈடுபட்டால் தான் அவனால் முழுமையான மகிழ்ச்சியை அடைய முடியும். இவ்வுலகத்திலேயே மிகவும் அழிக்க முடியாதசக்தி கடவுள்சக்திதான் என்று கூறி தன்னைப் பார்க்க வருகிறவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறார் லல்லு பிரசாத் யாதவ்.

ராஷ்டிரிய ஜனதாக் கட்சித் தலைவர் லல்லு பிரசாத் தன்னை தனது மனைவியோ, குழந்தைகளையோ ஜெயிலுக்கு வந்து பார்ப்பதை விரும்பவில்லை என்றுதெரிவித்துள்ளார்.

புத்தரின் கொள்கைகளில் தான் மிகவும் பற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது அவர் சைவ உணவு வகைகளையே சாப்பிடுகிறார்.

இரத்த அழுத்தம் மற்றும் இருதய சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்பட்டு வரும் லல்லுப் பிரசாத் யாதவ் ஜெயிலில் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டுவருகிறார்.

தன்னைப் பார்க்க வருகிறவர்களிடம் அவர் ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்று தான் நினைப்பதாகக் கூறுகிறார்.முன்னதாக அவரை முன்னாள் பிரதம மந்திரிகள் தேவேகவுடா, மற்றும் சந்திரசேகர் ஆகியோர் சந்தித்தார்கள்.

யாதவ் தன்னை சந்திக்க வருபவர்களிடம் தான் கடவுளை மட்டும் நம்புவதாகவும், தன் மேல் விதிக்கப்பட்டுள்ள குற்றங்களுக்கு வெகு விரைவில்நடுநிலையான தீர்ப்பு கிடைக்கும் என்றும் கூறி வருகிறார்.

ஐ.ஏ.என்.எஸ்.

English summary
Religion beckons Prasad Yadav in jail
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X