தமிழகத்தில் இன்று
குடியரசு பொன்விழா: அமைச்சர் அன்பழகன் தலைமையில் குழு அமைப்பு
சென்னை:
தமிழகத்தில் குடியரசு பொன் விழாவை சிறப்பாக கொண்டாட தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது. அதற்காக கல்வி அமைச்சர் அன்பழகன் தலைமையில்அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுஅமைக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை சட்டசபையில் செவ்வாய் கிழமை செய்தி மற்றும் விளம்பரத் துறைஅமைச்சர் முல்லைவேந்தன் தெரிவித்தார்.
சட்டசபையில் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இவ்விவாதத்தில் பேசிய உறுப்பினர்களுக்கு பதிலளித்த அமைச்சர் இத்தகவலைவெளியிட்டார். மேலும் அவர் கூறியதாவது:
பத்திரிகைகள் நல்லவையே எழுதினாலும், இல்லாதவையே எழுதினாலும், அவைஅரசின் அங்கங்கள் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். அதன்படிபத்திரிகைகளை அரசின் அங்கமாக இந்த அரசு கருதுகிறது. அதை பத்திரிகைகளும்உணர்ந்து கொண்டு செய்திகளை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
இருப்பினும் இது பத்திரிகையாளர் நலன் நாடும் அரசு என்பதை, பத்திரிகையாளர்கள்குடும்ப ஓய்வூதியம் உயர்வு, மரணமடைந்தால் வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்புஎன்று பல்வேறு சலுகைகளை இந்த அரசு செய்துள்ளதன் மூலம் தெரிந்து கொள்ளமுடியும்.
கடந்த ஆட்சியில் அரசு பொருட்காட்சியில் கூட ஆளும் கட்சித் தலைவியின் கட்அவுட்வைக்கப்பட்டிருந்தது. இந்த ஆட்சியில் அத்தகைய கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு, அரசின்திட்டங்கள், அறிவிப்புகள் பற்றிய விஷயங்கள் தான் இடம் பெற வேண்டும் என்றுமுதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்த ஆட்சி நடத்திய பொருட்காட்சிகள்மூலமாக கூட அரசுக்கு லாபம் கிடைத்துள்ளது.
ஆனால், அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட பொருட்காட்சிகளால் அரசுக்கு நஷ்டம்தான் கிடைத்தது. உதாரணமாக 91 முதல் 96ம் ஆண்டு வரை அதிக ஆட்சியில் 29பொருட்காட்சிகள் நடத்தப்பட்டன. 52 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் நஷ்டம்ஏற்பட்டது.
89-91ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடந்த 9 பொருட்காட்சிகள் மூலம் 9 லட்சத்து 18ஆயிரம் ரூபாய் அரசுக்கு லாபம் ஈட்டப்பட்டது. 96ம் ஆண்டுக்கு பிறகு திமுகஆட்சியில் 11 பொருட்காட்சிகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் 95 லட்சத்து 49ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் 69 முதல் 96 வரை இதுவரை 100 பொருட்காட்சிகள்நடத்தப்பட்டுள்ளது. 100வது பொருட்காட்சி மதுரையில் நடைபெறுகிறது. இந்த 100பொருட்காட்சிகள் மூலம் 7 கோடியே 51 லட்ச ரூபாய் அரசுக்கு லாபம் கிடைத்துள்ளது.
திரைப்படக் கல்லூரி துவங்கப்பட்டு 36 ஆண்டுகள் முடிந்து விட்டன. இப்போதுதான்அதற்கு அகில இந்திய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இக்கல்லூரி மாணவர்கள்அங்கேயே படம் எடுக்கவும், தங்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை திமுக ஆட்சியில்தான் நீக்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான நவீன கருவிகள் ஒரு கோடியே 34லட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்டன.
சுதந்திர தின பொன் விழாவை தமிழக அரசு மிகவும் விமரிசையாக கொண்டாடியது.அதேபோல் வரவிருக்கும் குடியரசு பொன் விழாவையும் கொண்டாட முடிவுசெய்துள்ளது. அதற்காக கல்வி அமைச்சர் தலைமையில் ஒரு குழுஅமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் நான், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுசெயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டு 200 ஆண்டுகள் முடிவடைவதை ஒட்டிசிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியருக்கு நினைவு மண்டபம் கட்டப்படும்.
கக்கன் பிறந்த ஊரில் அவருக்கு நினைவு இல்லம் அமைக்கப்படும். சென்னைவள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவர் நூலகம் அமைக்கப்படும். பெரியார் பெயரில்கருத்துப் படம் தயாரிக்கப்படும் என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications