தமிழகத்தில் இன்று
அரசு ஊழியர்களுக்கு இணையாக போலீசாருக்கு ஊதியம்: அரசு பரிசீலிக்கும் -கருணாநிதி
சென்னை:
அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், போலீசாருக்கும் வழங்க வழி வகைகாணப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார்.
தி.மு.க. ஆட்சியில் தான் போலீசாருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளனஎன்றும் அவர் தெரிவித்தார். சட்டசபையில் புதன் கிழமையன்று கேள்வி நேரத்தில்போலீசார் நலன் பற்றிய விவாதம் நடைபெற்றது.
தி.மு.க. உறுப்பினர் செங்கை சிவம், பா.ம.க. உறுப்பினர் கணேசன், சி.பி.ஐ.உறுப்பினர் சிவபுண்ணியம் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு, பதிலளித்துமுதல்வர் கருணாநிதி இத்தகவலை வெளியிட்டார். முதல்வர் மேலும் கூறியதாவது:
காவல் துறையில் கடமை ஆற்றும் போது, வீர தீர செயல்கள் புரிந்து உயிர் துறந்தபோலீசாரின் குழந்தைகளின் மேல் படிப்புக்கு என மருத்துவம்,பொறியியல்,வேளாண்மை ஆகிய மூன்று படிப்புகளில் தலா மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.சட்டக் கல்வியில் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுளள்ளன.
போலீசார் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது இறந்தால்,அவர்ளது குழந்தைகளுக்கு கலை, அறிவியல் மற்றும் தொழில் படிப்பு வரை உதவிசெய்யப் படுகிறது. அவர்களது குடும்ப பொருளாதார நிலைமையை கருத்தில்கொள்ளாமல் பெண் குழந்தை என்றால் திருமணம் வரை உதவி செய்யப் படுகிறது.
இந்த சலுகைகள் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் பொருந்தும் என்றுநினைக்கிறேன். அவ்வாறு இல்லையெனில் அவர்களுக்கும் வழங்க நடவடிக்கைஎடுக்கப்படும். இந்த அரசு போலீசார் மீது அக்கறை கொண்டுள்ளது.
போலீசாரின் அடிப்படை சம்பளம் 80 ரூபாய் என்றிருந்த நிலையை மாற்றி, ரூ 200ஆக்க உயர்த்தியது தி.மு.க. அரசுதான். போலீசார் நலனுக்கென இரண்டு கமிஷன்கள்அமைக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரைப்படி பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன.
போலீசாரின் சம்பளம் பறறிய கவலை அரசுக்கு உள்ளது. அரசு ஊழியருக்குஇணையான சம்பளம், அவர்களுக்கும் வழங்க வழி வகை காணப்படும்.
போலீசாரின் மருத்துவ சிகிச்சை உதவித்ததிட்டத்திற்காக அரசு 50 லட்ச ரூபாய்ஒதுக்கியுள்ளது. வெளிநாடுகளில் மருத்துவ சிகிச்சை பெறவும் உதவிசெய்யப்படுகிறது.
போலீசாருக்கு என மருத்துவ உதவித் திட்டம் தனியாக செயல் படுத்துப்படுகிறது.தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற நிதியுதவி செய்யப்படுகிறது.இத்திட்டத்திற்காக இவ்வாண்டு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவிசெய்யப் படுகிறது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்றால் ஒரு லட்ச ரூபாய் நிதியுதவியும்,குறைந்த வட்டியில் கடனும் வழங்கப்படும்.
போலீசார் இருதய அறுவை சிகிச்சை மற்றும் சிறு நீரக அறுவை சிகிச்சை செய்துகொண்டால், மருத்துவ உதவி வழங்தகப்படுகிறது. 96-97 ம் ஆண்டில் 50 பேருக்கு 42லட்ச ரூபாயும்,97-98ம் ஆண்டில் 5097 பேருக்கு 57 லட்ச ரூபாயும், 98-99ல் 108பேருக்கு 83 லட்ச ரூபாயும், 99-2000ல் 103 பேருக்கு 62 லட்ச ரூபாய் நிதியுதவியும்வழங்கப்படுள்ளது எனறார் முதல்வர்.
-
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
அரசு ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ்? 21 மாத கோடிக்கணக்கான நிலுவை தொகையில் தமிழக அரசு முடிவு? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications