கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்

Subscribe to Oneindia Tamil

இலங்கையுடன் ரகசிய பேச்சா?: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்

டெல்லி:

இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்து அந்நாட்டு அரசுடன் இந்தியா ரகசியப் பேச்சு நடத்துகிறதா என்பது குறித்து நாடாளுமன்றத்தில்மத்திய அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் திமுக எம்.பிக்கள் வியாழக்கிழமை கோரிக்கைவிடுத்தனர்.

இலங்கை அரசுக்கு இந்தியா எந்தஉதவியும் செய்யக் கூடாது என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இலங்கைப் போரில் புலிகள் முன்னேற்றம் கண்டுவருகின்றனர். இதைத் தடுக்க இலங்கை அரசுக்கு இந்தியா உதவி செய்யும் என பேச்ச அடிபடுகிறது. இதுதொடர்பாக ரகசியப் பேச்சு நடப்பதாகவும்தெரிகிறது. இதுகுறித்து சபையில் தெரிவிக்கப்பட வேண்டும் என்றனர்.அதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரமோத் மகாஜன்கூறுகையில், இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அறிக்கை வைப்பார் என்றார்.

ராஜ்யசபாவிலும் இப்பிரச்சினை எழுப்பப்பட்டது. திமுக எம்.பி. விடுதலை விரும்பி பேசுகையில், இலங்கை விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதுதெரியவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றார். இதற்குப் பதிலளித்த வெளியுறவத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங், இப்பிரச்சினை தொடர்பாக புதன்கிழமைதான் ஆலோசனை நடத்தினோம். உறுப்பினர்களின் சந்தேகத்தைப் போக்கும் வகையில் சபாநாயகரின்அனுமதியுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதுதொடர்பாக திமுக தலைவரும், அமைச்சருமான முரசொலி மாறனுடன் பேசியுள்ளேன். மீண்டும் அவருடன்ஆலோசிக்கப்படும் என்றார்.

ஆயுத உதவி கூடாது: வைகோ

இதற்கிடையே, இலங்கைக்கு ஆயுத உதவி செய்யக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். மத்தியபாதுகாப்பு அமைச்சர் அத்வானியைச் சந்தித்த அவர் இக்கோரிக்கையை விடுத்தார். பிரதமர் வாஜ்பாயிடமும் இக்கோரிக்கையை அவர் கூறினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசின் நிலை திருப்தி தரும் விதமாக உள்ளதாக தெரிவித்தார்.

இலங்கை பிரச்சனை: கருணாநிதி - வாஜ்பாய் இன்று சந்திப்பு

இந்த நிலையில், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் வாஜ்பாயுடன், முதல்வர் கருணாநிதிவெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.

முன்னதாக பிரதமர் அழைப்பை ஏற்று கருணாநிதி வியாழக்கிழமை டெல்லி சென்றார். யானை இறவு மற்றும்பலாய் ராணுவ முகாம்களை கைப்பற்றியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தை நெருங்க வருகின்றனர். விடுதலைப்புலிகள். அங்கு நிலை கொண்டுள்ள 40,000 ராணுவ வீரர்களின் உயிருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளதால்அவர்களைக் காப்பாற்ற இந்தியாவின் ராணுவ உதவியை இலங்கை அரசு நாடியது. ஆனால் மனிதாபிமானமுறையில் மட்டுமே உதவ முடியும் என்று இந்தியா கூறி விட்டது. இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கப்படலாம்என்றும் தெரிகிறது.

இந்த நிலையில், இப்பிரச்சனையில் தமிழக மக்களின் உணர்வைத் தெரிந்து கொள்வதற்காக தமிழக முதல்வர்கருணாநிதியை டில்லி வருமாறு வாஜ்பாய் அழைத்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+