கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்
கீயிைன் பாதையில் வாழ்ந்த பெரியோர்களில் மிக உன்னதமான தலைவர்பாலகங்காதர திலகர். அவரது கீதை விளக்கம் திலகியம் என்றேகொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட தன்னலமற்ற திலகரைஉருவாக்கிய நூல் கீதை.
""செயலைச் செய்: செயலை உணர்ந்து நேசித்துச் செய். அதன் பலனில் பற்றுவையாதே"" என்ற கீதையின் கர்ம யோகமே திலகரின் உயிர் மூச்சு. ஆசிரியராகத் தம்வாழ்வைத் தொடங்கியவர் திலகர். தமது ஆசிரியர் பணியை மிகுதியும் நேசித்தவர்அவர்.
இந்திய விடுதலைப் போராட்டம் அவர் காலத்தில் உச்சத்தில் இருந்தது. அவரது சீடர்கள்விடுதலைக்குப் பின் திலகரின் பணி என்னவாக இருக்கும் என்றுகூட யோசிக்கஆரம்பித்தனர். திலகர் இந்தியாவின் பிரதமரா? ஜனாதிபதியா? என்று ஆராய்ந்தனர்.""திலக்ஜி! இந்திய விடுதலைக்குப் பின் தாங்கள் பிரதமர் ஆவீர்களா?"" என்றுகேட்டனர்.
""நான் ஏன் பிரதமராக வேண்டும்? மீண்டும் நான் ஆசிரியர் ஆவேன். ஆயிரம்பிரதமர்களை உருவாக்குவேன். பிரதமராவதைவிட பல பிரதமர்களை உருவாக்கும்என் ஆசிரியர் பணியை நேசிக்கிறேன்"" என்றார் திலகர்.
இன்று எத்தனை ஆசிரியர்கள் தங்கள் பணியை இவ்வளவு ஆழமாக நேசிக்கின்றனர்?ஒவ்வொருவரும் தமது தொழிலை நேசிக்கும் இரகசியத்தை விளக்குவதே கர்மயோகம்!
கர்மம் என்ற சொல்லுக்குச் செயல் என்று பொருள், பூமி செயல்களால்தான் வாழ்கிறது.வேளாண்மை செய்யும் உழவரின் உழைப்பால் உணவு பெறுகிறோம். நெசவாளியால்உடை பெறுகிறோம். சமுதாயத்தின் பல்வேறு உறுப்பினர்களாகிய மருத்துவர்,ஆசிரியர், நாவிதர், இப்படிப்பட்ட பலரது செயல்களே உலகத்தை உயிரோடுவைக்கிறது.
ஆனால் இந்தச் செயல் தான் பாவ, புண்ணிங்களை தோற்றுவித்து, உயர்வு தாழ்வுகள்,இன்ப துன்பங்கள் இவற்றிலும் நம்மைச் சிக்க வைக்கிறது. இப்படிச் சிக்கிக்கொள்ளாமல் செயல் புரிய, வாழ்வை ஒரு யக்ஞமாக நடத்த கீதை வற்புறுத்துகிறது.
செயல் புரியும் போது அதனால் கிடைக்கப் போகும் ஆதாயங்களை எதிர்பார்த்துச்செய்வது, தன் முனைப் போடு செய்வது, செயலைவிட தன்னை முக்கியமாக நினைந்துசெய்யவது கர்ம யோகம் ஆகாது. உலகம் செயல்களால் மட்டுமே உயிர் வாழ்கிறதுஎன்பதால் செயலின் முக்கியத்துவத்தை மட்டுமே நினைந்து செய்யும் செயல்கள் பாவ,புண்ணியத்தில் நம்மைப் பந்தப் படுத்தாது என்கிறது கீதை.
ஒரு பாடகன் பாடும் போது பாட்டின் மீது தான் முழு அக்கறை இருக்க வேண்டுமேஒழிய பாடிய பிறகு பெரிய மாலை போடுவார்களா? சின்ன மாலை போடுவார்களா?என்று விளைவின் மீது கவனம் செலுத்தினால் செயல் உருப்படுமா?
ஒரு நீதிபதி குற்றவாளிக்குத் தண்டனை கொடுக்கும் போது... இவன் பிரபல ரவுடி..இவனக்குத் தண்டனை கொடுத்தால் நமக்கு ஆபத்து வரும் என்று பின் விளைவுகுறித்து திட்டமிட்டால் நீதி கொடுக்க முடியுமா? எந்த ஒரு தனிமனிதனையும் விட,,சமுதாயம் செம்மையாக இயங்க செயல்தான் முக்கியம் என்பதே கீதையின் முக்கியசெய்தி.
செயலைவிட, செயலின் விளைவுகள் மீதுள்ள கற்பனை, எதிர்பார்ப்பு, ஆசைதோன்றினால் அது செயலை அழித்துவிடும், அல்லது கெடுத்து விடும். பள்ளிக்கூடத்தில் படித்த பழைய கதையை நினைவூட்டுகிறேன்.. கேளுங்கள்.
கண்ணாடிப் பொருட்கள் விற்கும் வியாபாரி ஒருவன் .. வெயிலில் சுற்றிவிட்டுஓய்வுக்காக மரத்தடியில் படுத்திருந்தான். தன் வியாபாரத்தின் வெற்றி விளைவுகளைப்பற்றி கறபனை செய்யத் தொடங்கினான்.
கூடையில் உள்ள கண்ணாடிப் பொருட்கள் முழுவதையும் விற்று விட்டால் நல்லஇலாபம் வரும். அதையும் முதலீடு செய்து விற்றால் பல மடங்கு பணம் வரும். பிறகுபெரிய பணக்காரன் ஆவேன். பணக்காரன் ஆன பின் பெரிய பணக்கார வீட்டில் பெண்எடுப்பேன். அவள் பரம்பரை பணக்காரி..திமிர் பிடித்து என்னை அவமதித்தால் ..அவளை எட்டி ஓர் உதைவிடுவேன் என்று கூடையை எட்டி உதைக்க ..ஐயகோ..முதலுக்கே மோசம்.. அவன் எதிர்காலம் கண்ணாடி போல் சுக்கு நூறானது. செயலின்பயன் மீது பற்று வைத்த பல பேர் கதை இதுதான்!
செயலின் பலனில் பற்று வைக்காதே என்கிற கீதை வரிகளை நுட்பமாக விளங்கிக்கொள்ள வேண்டும். பாடுபட்டு ஒரு செயலைச் செய்து விட்டு அதன் பலனில் இருந்துவிலகி நிற்பது நடக்கிற காரியமா? செயலின் பயன் மீது நமக்கு உரிமை இல்லை என்றுகீதை ஒரு போதும் சொல்லவில்லை!
முப்பது நாளும் உழைத்துவிட்டு ஒன்றாம் தேதி சம்பளம் வாங்காதே என்று கீதை ஒருபோதும் சொல்லவில்லை...ஒன்றாம் தேதி கிடைக்கும் சம்பளத்திற்காகவே முப்பதுநாளும் குப்பை கொட்டாதே என்பது தான் கீதையின் ஜீவன்.
என் எழுத்துக்குக் கூலி வாங்கியது உண்டு. ஆனால் கூலிக்காக ஒரு போதும் நான்எழுதியது இல்லை. எழுத்தை நேசிக்காமல் கூலியை நேசித்தால் எழுதுவது யாகம்அல்ல! துரோகம், செயலின் கூலியை விட செயலை நேசிப்பவர்களே இன்றையதேவை.
(தொடரும்...)
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications