மேட்ச் பிக்சிங் கில் அசாருக்குத் தொடர்பு இல்லை: போலீஸ் விளக்கம்
டெல்லி:
மேட்ச் பிக்சிங் கில் அசாரூதினுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஷார்ஜா கிரிக்கெட் போட்டியின்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் யாருடனோ மொபைல் தொலைபேசியில் பேசினார். அந்தமொபைல் போன் யாருக்குச் சொந்தமானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விபரம் வருமாறு:
தற்போது மேட்ச் பிக்சிங் என்ற கிரிக்கெட் சூதாட்டம் கிரிக்கெட் வட்டாரத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் ஷார்ஜா கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதீன் யாருடனோ மொபைல் தொலைபேசியில் பேசினார்என்று டெல்லி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த மொபைல் போன் யாருக்குச் சொந்தமானது என்று போலீசார் தீவிரமாய்த் தேடிவந்தனர்.
இதனால் அவருக்கும் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு இருக்குமோ என்று போலீசார் சந்தேகம் அடைந்த நிலையில் இந்தத் தொலைபேசி உரையாடல்குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அவர் யாருடன் தொலைபேசியில் பேசினார்? அந்த மொபைல் போன் யாருக்குச் சொந்தமானது என்பது மர்மமாக இருந்து வந்தது. இந்நிலையில் அவர்உபயோகித்த மொபைல் போன் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் பிரதீப் மேனன் என்பவருடையது என்று தெரிய வந்தது.
இதுகுறித்து தொழிலதிபர் பிரதீப் மேனன் கூறுகையில், நான்தான் என் மொபைல் போனை அசாரூதீனுக்குக் கொடுத்தேன். அசார் எனது நீண்ட கால நண்பர்.அவர் அதை தனது சொந்த உபயோகத்திற்காகத் தான் உபயோகித்து வந்தாரே தவிர கிரிக்கெட் சூதாட்டத்திற்காக அல்ல என்றார்.
இதையடுத்து அசாருக்கும், கிரிக்கெட் சூதாட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போலீசார் கூறினார்கள்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications