தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தப் படுகொலைச் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாமனிதாபிமான முறையில் உதவ வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
சனிக்கிழமை சென்னையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டம் முடிந்த பின் ஜெயலலிதா நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இலங்கையில் தினமும் நடந்து வரும் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா உதவ வேண்டும். தமிழர்களுக்கு முழு உரிமையும், பாதுகாப்பும் கிடைக்கவேண்டும்.
பேச்சுவார்த்தை மூலமே இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இந்தியா உதவலாம். இதுவேஅதிமுகவின் நிலைப்பாடு.
இலங்கையில் 40 ஆயிரம் சிங்கள சிப்பாய்களை மீட்க மத்திய அரசு இராணுவ உதவி செய்ய முடியாது என்று கூறிவிட்டது. இதை நான் வரவேற்கிறேன்.அரசியல் தீர்வுக்குத் தான் இந்தியா உதவ வேண்டும். இலங்கையில் நடப்பது உள்நாட்டுப் பிரச்சனை. இதற்கு இந்தியா உதவத் தேவையில்லை. ஆனால்இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இதற்கு இந்தியா உதவலாம்.
அதிமுக என்ற மிகப்பெரிய நதியை சுத்தப்படுத்துவதற்காக நான் பழைய நிர்வாகிகளை தூய்மைப்படுத்தும் நோக்கத்தில் கட்சியிலிருந்து நீக்கியுள்ளேன். அவர்களைமீண்டும் கட்சியில் சேர்ப்பேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தமிழக சட்டசபைக்கு இப்பொழுதோ, அல்லது இன்னும் 6 மாதம் கழித்தோ எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் சந்திக்கத் தயாராகஇருக்கிறோம். தேர்தலில் அதிமுக ஜெயித்தால் நாங்கள் தனித்தே ஆட்சி அமைப்போம்.
சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் கண்டிப்பாய் அருதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்போம்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications