தமிழகத்தில் இன்று
டெல்லி:
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பாதுகாப்பிற்காக சென்ற போலீஸ் ஜீப் மோதி உடல் சிதைந்து இறந்த சிறுமிக்கு மத்திய அரசு ரூ 2 லட்சம் நஷ்டஈடுவழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைக் கழகம் (என்.எச்.ஆர்.சி) கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து மனித உரிமைக் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரமுகர்கள் தங்கள் கார்களில் செல்லும்போது அவர்களது பாதுகாப்பிற்காகச் செல்லும் ஜீப்புகள்பாதசாரிகள் மேல் மோதி விபத்து நடப்பது சகஜமாகி வருகிறது.
அந்த விபத்துக்களில் இறந்த பொதுமக்களுக்கென்று எந்த வித உதவித்தொகையையும் அரசு அளிப்பதில்லை. பாதுகாப்பு வாகனம் மோதி இறந்தஇந்தச் சிறுமிக்கு மத்திய அரசு இன்னும் 4 வாரங்களுக்குள் நஷ்டஈடாக ரூ 2 லட்சத்தை வழங்க வேண்டும்.
9 ம் வகுப்பு படித்து வந்த வந்தனா சிங் என்ற சிறுமி இவ்விபத்தில் இறந்தாள். 1997 ம் ஆண்டு நவம்பர் 7 ம் தேதி இந்த மாணவி பள்ளிக்கூடத்திலிருந்துதிரும்புகையில் விபத்துக்குள்ளானாள். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுமுன் இறந்தாள். கோர்காபூரில் இவ்விபத்து நடந்தது.
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பாதுகாப்பிற்காக பல போலீஸ் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அந்த போலீஸ் வாகனத்தில் எந்தவாகனத்தில் மோதி இந்தச் சிறுமி இறந்தாள் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நீதிபதி ஜே.எஸ்.வர்மா கூறுகையில், விபத்துக்குள்ளாகி இறந்த இந்தச் சிறுமியின் குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ 2 லட்சம்வழங்க வேண்டும். பாதுகாப்பிற்காக வந்த வாகனம் மோதியதில் அநியாயத்திற்கு பள்ளிச்சிறுமியின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது என்று தீர்ப்பு கூறினார்.
இந்தத் தீர்ப்பை உடனடியாய் செயல்படுத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமைக் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications