தமிழகத்தில் இன்று
கட்சியினருடன் ஆலோசனை, களையெடுப்பு என்று இரண்டு கட்டப் பணிகளை திட்டமிட்டபடி செயல்படுத்திய ஜெயலலிதா,அடுத்தக் கட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். கட்சியினரை உற்சாகப்படுத்தி தேர்தலுக்குதயாராக்கும் வகையில் இந்த சுற்றுப் பயணத் திட்டத்தை அவர் வகுத்து வருகிறார்.
அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கட்சியில் தாம் மேற்கொண்ட களையெடுப்புக்கு பின்னர்சென்னையில் சனிக்கிழமை அதிமுக செயற்குழு ஜெயலலிதா தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் அவர் எடுத்த எல்லாநடவடிக்கைகளுக்கும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைத்தது மட்டுமில்லாமல், இனிமேலும் இதுபோன்ற நடவடிக்கைகளைதொடர்வதற்கும் முழு அதிகாரத்தை ஜெயலலிதா கையில் செயற்குழு ஒப்படைத்தது.
அதனால் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படும் ஜெயலலிதா, அதே உற்சாகத்தை புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றிய, நகர,மாவட்ட நிர்வாகிகளுக்கு ஏற்படுத்தி, அவர்களை தேர்தலுக்கு தயார் படுத்தும் வகையில் சுற்றுப் பயணத் திட்டம் ஒன்றைதீட்டியுள்ளார். அதற்கான ஆலோசனை செயற்குழுவில் நடைபெற்றுள்ளது.
பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள கட்சியினரின் கருத்துக்களை கேட்டறிவதற்காக தொடர்ஆலோசனைக் கூட்டங்களை சென்னையில் நடத்தினார் ஜெயலலிதா. கிட்டத்தட்ட 3 மாதங்களாக நடைபெற்ற இந்த கூட்டத்தில்கிளைக் கழக, நகர, ஒன்றி யக் கழக நிர்வாகிகள் மட்டுமே சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்கள் மட்டுமே பேசஅனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சொன்ன புகார்களின் அடிப்படையில் தான் கட்சியின் பெருந்தலைகள் என்று கருதப்பட்டசேடபட்டி த்தையா, ரகுபதி, கருப்பசாமி பாண்டியன் ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினார் ஜெயலலிதா.
செங்கோட்டையன், மதுசூதனன், சின்னசாமி என்ற ஒரு பெருங்கூட்டத்தையே, பதவியை பறித்து காலி பண்ணினார்.அதுமட்டுமல்ல; அடிமட்டத் தொண்டர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் கட்சியின் ஆணிவேர்களாக கருதப்படும்மாவட்டச் செயலாளர்கள் பலரையும் பதவியை விட்டு நீக்கியுள்ளார். ஜெயலலிதா அறிவித்தபடி 39 மாவட்டச் செயலாளர்கள்மாற்றப்பட்டுள்ளனர்.
இப்படியொரு ஒட்டுமொத்த அதிரடி நடவடிக்கையும், மாற்றம் எந்த கட்சி வரலாற்றிலும் இதுவரை நடைபெற்றதில்லை. இதனால்தலைமைக்கு எதிராக பெரிய அளவில் அதிருப்தி வட்டம் உருவாகும் என்று அதிமுக விசுவாசிகள் அஞ்சினர். அந்த அச்சம்ஓரளவுக்கு நியாயமானது தான் என்றாலும், ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு ஆளான தலைவர்கள் பலரும், தலைமைக்குஎதிராக கொடி உயர்த்த தயாராக இல்லை. அதிருப்தியை மனதில் வைத்துக் கொண்டு மறுபடியும் ஜெயலலிதாவின் கருணையைபெறவே முயற்சிக்கின்றனர். அதை சனிக்கிழமை சென்னையில் கூடிய அக்கட்சியின் செயற்குழுவில் காண முடிந்தது.
பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட பல முன்னாள் அமைச்சர்கள் செயற்குழுவில் இடம் பெறத் தகுதியற்றவர்களாகி விட்டனர்.அதன் காரணமாக அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. செயற்குழுவில் உறுப்பினராக இல்லாத பட்சத்திலும், கட்சியில்முக்கியமானவர் என்ற அடிப்படையில் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கும் வழக்கம் இன்றைக்கும் திமுகவில் இருந்துவருகிறது. ஆனால், அதிமுகவில் அந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
ஆனாலும், ஜெயலலிதாவின் வருகையின்போது அவரது பார்வையில் பட வேண்டும் என்பதற்காகவும், தாம் அதிருப்தியில்இல்லை என்பதை காட்டிக் கொள்வதற்காகவும், கட்சி அலுவலகம் வந்து காத்திருந்த தலைவர்கள் ஏராளம். இவர்கள் எல்லாரும்ஜெயலலிதாவால் களையெடுக்கப்பட்டவர்கள் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.
இப்பின்னணியில் செயற்குழுவை கூட்டி ஒப்புதலை பெற்ற ஜெயலலிதா அந்த கூட்டத்தில் தனது செயல் திட்டத்தை பற்றிவிவரித்துள்ளார். தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று கட்சியினரை அறிவுறுத்திய அவர்,அதற்கு முன்பாக தாம் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் வரவிருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை விரிவாகசெய்யும்படியும் அவர் கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் இந்த திடீர் சுற்றுப் பயணத்திற்கு சில பின்னணி காரணங்கள் இருப்பதாக அக்கட்சி வட்டாரம் கூறுகிறது. முதல்காரணம், கட்சியில் இருந்து அவர் பல தலைவர்களை நீக்கியுள்ளதால், பெரிய அளவில் எதிர்ப்பு அலை பல மாவட்டங்களில்எழுந்துள்ளதாக சிலர் சித்தரிக்கின்றனர். அதை பொய்யாக்கி, தொண்டர்கள் தம் பக்கம் இருப்பதை உடனடியாக காட்ட வேண்டும்என்று ஜெயலலிதா விரும்புகிறார் என்பது.
இரண்டாவது காரணம், தம்மால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் பற்றி பல விதமான பேச்சுக்கள், விமர்சனங்கள்எழுந்துள்ளன. அவர்களது கட்சிப் பணி எவ்வாறு இருக்கிறது என்பதை சுற்றுப் பயணத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்என்று ஜெயலலிதா கருதுவது.
மிக முக்கியமாக புதிய பொறுப்பாளர்களை பொதுக் கூட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் அறிகப்படுத்தி, அதன் மூலம்அவர்களை கட்சிப் பணியில் முடுக்கி விடுவதற்காக ஜெயலலிதா இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதாக தெரிகிறது. மேலும்தேர்தலுக்கு முந்தைய சுற்றுப் பயணமாக இது அமைவதால், பொதுமக்களின் எண்ண ஓட்டங்களை உணர்ந்து கொள்ள முடியும்என்பதும் ஜெயலலிதாவின் அரசியல் கணக்கு.
அதன்படி உருவான இந்த சுற்றுப்பயணத் திட்டத்தை மூன்று கட்டமாக நிறைவேற்ற ஜெயலலிதா திட்டமிட்டு வருவாதாகதெரிகிறது. முதல் கட்டமாக திருச்சி, தஞ்சை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் பயணம் செய்கிறார். ஒவ்வொருமாவட்டத்திலும் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
தன்னுடைய சுற்றுப் பயண பொதுக் கூட்டங்களில் முடிந்தவரையில் தோழமைக் கட்சித் தலைவர்களையும் பேச வைப்பதுபற்றியும் ஜெயலலிதா சிந்தித்து வருவதாக அக்கட்சி வட்டாரம் தெரிவித்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications