தமிழகத்தில் இன்று
பாட்னா:
நம் ஊர்களில் கொள்ளையர்கள் வீட்டுக்குள் வந்து விட்டால் குழந்தைகள் அலறியடித்துக்கொண்டு ஓடுவதும், அழுவதும்தான் வழக்கம். ஆனால்எந்தவிதப் பதட்டமும் இல்லாமல் முகமூடிக் கொள்ளையர்களிடம் சிக்கித் தவித்த தனது தாயைக் காப்பாற்றியது 6 வயதான சிறுமி.
இதுகுறித்த விபரம் வருமாறு:
பாட்னாவிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள காகெளவுல் பகுதியில் வசித்து வருபவர் நீனா. இவரது மகள் சுவாதி சர்மா.
சம்பவத்தன்று அடையாளம் தெரியாத கொள்ளைக் கும்பல் ஒன்று இவர்கள் வீட்டுக்குள் புகுந்தது. அடுத்த வினாடி நீனாவையும், அவரது மகயுைைம்மிரட்டி வீட்டிலுள்ள விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் உடனடியாய் எடுத்துக்கொடுக்குமாறு கேட்டது. இல்லாவிட்டால் கூரிய ஆயுதங்களால் கொலைசெய்து விடுவேன் என்று மிரட்டியது.
ஆனால் அங்கே விளையாடிக்கொண்டிருந்த ஸ்வாதியோ வீட்டிலிருந்த அலார மணியை அடித்த ஓசையெழுப்பி அக்கம்பக்கத்தினரை அழைத்தது.
இதுகுறித்து ஸ்வாதி கூறுகையில்,
நான் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது 4 பேர் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தார்கள். அப்போது எங்கள் வீட்டுக் கதவு திறந்தேயிருந்தது. நுழைந்தவேகத்தில் அவர்கள் என் அம்மாவை கட்டிப்போட்டு அடித்து உதைக்க ஆரம்பித்தனர். கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்கள். அவர்கள்கையில் துப்பாக்கி வைத்திருந்தார்கள்.
அப்போது நான் கதவிடுக்கில் ஒளிந்து கொண்டு வீட்டிலிருந்த அலாரத்தை அடித்து ஓசையெழுப்பினேன் என்று கூறியது. இதையடுத்து பக்கத்து வீட்டிலிருந்த 2பேர் அங்கேயிருந்த காவல் நிலையத்தை தொடர்பு கொண்டனர். பலர் அவர்கள் வீட்டுமுன் கூடினர்.
அப்போது தப்பிக்கமுயன்ற 4 பேரில் இரண்டு பேர் பிடிபட்டனர். மேலும் இரண்டு பேர் 70 ஆயிரம் பெறுமானமுள்ள தங்க, வெள்ளிச்சாமான்களுடன்தப்பித்து விட்டனர்.
இதுகுறித்து ஸ்வாதியின் அம்மா நீனா கூறுகையில், என் மகளால்தான் எனக்கு மறுவாழ்க்கையே கிடைத்தது என்று நெகிழ்ச்சியாய்க் கூறினார். ஸ்வாதிகூறுகையில், நான் பிற்காலத்தில் மிகச்சிறந்த போலீஸ் அதிகாரியாக வர விரும்புகிறேன் என்று கூறியது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications