தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

யாழ்பாணம் அருகே புலிகள்-ராணுவம் கடும் சண்டை

கொழும்பு:

யாழ்பாணத்தில் அரியாலி அருகே ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தினர். புதன்கிழமைபல இடங்களில் அவர்கள் ராணுவத்தினரை பின்வாங்கச் செய்தனர்.

புலிகள் அலை அலையாய் வந்து ராணுவத்தினர் மீது தாக்கி வருகின்றனர்.

அங்கு தொடர்ந்து பலத்த சண்டை நடந்து வருகிறது. இரு தரப்பினரும் துப்பாக்கிகள், மார்ரட்டர் துப்பாக்கிகளால்சுட்டுக் கொண்டனர். இதில் இரு தரப்பிலும் பலத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.

தரைப்படையினருடன் விமானப் படையினரும் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தினர். அரியாலி,தனன்கிலப்பு பகுதிகளுக்கு கூடுதல் வீரர்களை ராணுவம் அனுப்பி வைத்துள்ளது. அரியாலியில் விடுதலைப் புலிகள்புகுந்துவிட்டனர். ஆனால், தனன்கிளப்பு தங்கள் கட்டுரப்பாட்டில் தான் உள்ளது என ராணுவம் அறிவித்துள்ளது.

அதிகாலை 3 மணிக்கு புலிகள் ராணுவத்தினரை தாக்கத் தொடங்கினர்.

புலிகள் தரப்பிலும் பலர் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. கடந்த 10 நாட்களில் விடுதலைப் புலிகள் நடத்தியமிகப் பெரிய தாக்குதல் இது தான். கடந்த மாதம் 30ம் தேதி புலிகள் பலாலி ராணுவ முகாமை கைப்பற்றிஆயுதங்களையும் எடுத்துச் சென்றனர். முன்னதாக யானைஇறவு புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தது.

பலத்த உயிரிழப்புகளுக்கு இடையிலும் புலிகள் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். அரியாலியில் கடும் மோதல்நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+