தமிழகத்தில் இன்று
டெல்லி:
இந்திய மக்கள்தொகை நாளை (வியாழக்கிழமை) 100 கோடியை எட்டுகிறது என்று புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இன்று நள்ளிரவு(புதன்கிழமை)12.56க்கும் பிறக்கும் குழந்தையுடன் சேர்த்து இந்திய மக்கள் தொகை 100 கோடியை எட்டுகிறது.
புள்ளியல் வல்லுநர்கள் நடத்திய கணக்கெடுப்பு விபரத்தில் இது தெரியவந்துள்ளது.
அதிகரித்து வரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் வகையிலும், குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வது குறித்த அவசியத்தை பரப்பும் வகையிலும்விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்தவாரம் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. கபில்சிபல் இதுகுறித்துக் கூறுகையில், இந்திய மக்கள்தொகை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இது மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகையில் பெரும்பான்மையானோர் வறுமைக்கோட்டுக்குக்கீழே உள்ளனர்.அவர்களுக்கென்று நலத்திட்டங்களை அறிமுகப்படுத்த அரசு முன்வரவேண்டும் எனறார்.
பாப்புலேஷன் கவுன்சில் திட்ட இயக்குநர் அஞ்சலி நாயர், இதுகுறித்துக் கூறுகையில் ஐந்தாண்டுத் திட்டத்தின் முழுமுதல் குறிக்கோளே தாய்-சேயின் நலன்தான்.அதிகக் குழந்தைகள் பெற்ற ஒரு தாயின் நலன் இயற்கையாகவே பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்குஅனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதால் நாட்டில் மக்கள்தொகை குறைவதுடன் நாட்டில் வேலையில்லாப்பிரச்சனையும் தீரும்.
இந்தியாவுடன் ஒப்பீடு செய்கையில் சீனா மக்கள்தொகை கட்டுப்பாட்டில் அதிக அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியா குடும்பத்திற்கு ஒரு குழந்தைத்திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார்.
யு.என்.ஐ.
இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications