தமிழகத்தில் இன்று
ராமேஸ்வரம்:
இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அகதிகள் இதுவரை தமிழகத்திற்குள் அதிக அளவில் நுழையவில்லை.அவர்களின் வருகை மிகக் குறைவாகவே உள்ளது என்று கடற்படை தெரிவித்துள்ளது.
யாழப்பாணத்தை ராணுவத்தினரிடம் இருந்து மீட்பதற்காக விடுதலைப்புலிகள் போர் நடத்தி வருகின்றனர்.இதனால் பாதிக்கப்பட்ட அகதிகள் 23 பேர் தலைக்காவிரியில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் கடந்த வாரம்விசைப்படகு மூலம் தமிழகம் வந்தடைந்தனர்.
இந்நிலையில் தற்போது அகதிகளின் வருகை குறைந்துள்ளது. தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில்பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நடக்கும் விடுதலைப்புலிகள், ராணுவத்தினர் பிரச்சனையினால் பாதிக்கப்படும் அகதிகளின் நிலைதர்மசங்கடமாக உள்ளது. அவர்கள் விசைப்படகு மூலம் தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளுக்கு வந்துவிடுகிறார்கள்.
இதுகுறித்து ராமேஸ்வரம் கடற்படை கமாண்டோ பிரான்சிஸ் கூறுகையில், இலங்கையில் பிரச்சனையினால்எப்போதும் பாதிக்கப்படுவது அகதிகள்தான்.
இந்த விஷயத்தில் இலங்கை அரசு முழு அளவில் விழிப்புணர்வைக் காட்டுவதில்லை.
முழுமையான தீர்வு எதையும் இதுவரை எடுக்கவில்லை. மேலும் தீவிரவாதிகள் அகதிகள் என்ற பெயரில்தமிழகத்திற்குள் நுழையும் அபாயமும் இருக்கிறது.
இதனால் ராமேஸ்வரத்திற்கு அவர்கள் வந்துவிடக்கூடாது என்பதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தீவிரமாய்க் கண்காணித்து வருகின்றனர்.
தற்போது இங்குள்ள மக்களின் வாழ்க்கையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. மீனவர்கள் வழக்கம் போல் படகுமூலம் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகிறார்கள். அவர்களுக்கு இப்பிரச்சனையினால் இதுவரை எந்தப்பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.
இதற்கிடையே இலங்கை அரசு அந்நாட்டில் பிறப்பித்த அவசர கால உத்தரவு மேலும் ஒரு மாதத்திற்குநீட்டிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications